பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 & சிந்தாநதி "ராம்!" அண்ணா என்னைக் கூப்பிடுகிறார். எத்தனை வருடங்கள் கழித்தும்! ஆனால் எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? நானும் திருதிருவென விழித்தேன். 女 ★ ★ அவன் எங்கள் வீட்டுக்கு வரும் இடைவேளைகள் நீண்டு, ஒருநாள் வருவது நின்று போய்விட்டது. ஒரு மாதம், இரண்டு, மூனு, ஆறு “என்னடா கண்ணா, உன் சினேகிதன் எங்கே?" “எங்கானும் வேலை கிடைச்சிருக்கும். இல்லை, வேலைக்கு அலைந்துகொண்டிருப்பான். அவன் கவலை அவனுக்கு. உங்களுக்கே முழு நேரத்தையும் கொடுக்க முடியுமா?” வாஸ்தவம். விளக்கு வைத்தாகி விட்டது. ஆயிரம் முணுமுணுப்பு களுடன் சீமெண்ணெய் விளக்கு. மூன்று நாட்களாக மின்சாரம் அம்பேல். வீட்டைச் சுற்றித் தண்ணிர்த் தகடு- மழை காலம் வந்தால், என் முதுகுக்குப் பின்னால், ஆனால் எனக்குக் காது கேட்கும்படி எனக்கொரு பெயர் "Captain of the sinking Ship!" அல்லது தெப்போத்ஸவ மண்டகப்படிக் காரர். ' 'இருந்து இருந்து உங்கப்பா இடம் பார்த்து வாங்கினாளே !” சிங்கத்துக்குப் பல் தேய்ந்துபோனால், நகம் இற்றுப் போனால், எலிகள் ஒடி விளையாடக் கேட்பானேன்! ஆம், சிங்கம்தான், உத்தியோகம்போது. எனக்குப் பார்வையில் தோஷம் அப்பத்தான் துவக்கம். நடந்தாலே தள்ளுகிறது. இவ்வளவு சுருக்க உடல் சரிய வேண்டாம்.