பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 8 165 ஆண்களுக்கு உத்யோகம்தான், உடம்பை இழுத்துப் பிடித்து நிற்கவைக்கும் மாலிஸ். இல்லாட்டி "ஏமண்டி பாபு, குலாலா உன்னாரா? மீரு கூேடி ம லாபம் எட்லா? எத்தனை நாள் ஆனால் என்ன? அந்தக் குரலை என்னால் எப்பவும் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதுவும் இப்போ இருக்கும் என் மன நிலையில். 'வா, வா, தேவராஜ். இப்படி, உட்காரு. இதோ இங்கே-” கையை இழுத்துப் பிடித்து மேடையில் என் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டேன். மனதின் துளும்பலில் கொஞ்ச நாழி இருவரும் பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். ஏதோ ஒருவகையில் மாறியிருந்தான் நெற்றி விசா லித்து, ஆனால் மயிர் உதிர்ந்து அல்ல- முகம் தெளிவாகி, பார்வையில் ஒரு சிங்கம் படுத்திருந்தது. பாவனையில் பட்டறையில் காய்ச்சித் தட்டிய எஃகின் பிகு "அப்ப.ா” என்று இழுத்தேன். "அப்பா காலமாயிட்டாரு.” அவனை அணைத்துக்கொண்டேன். எதிர்பார்த்தது தான் என்றாலும். இதே வயதில்தான் நானும் என் தகப்பனாரை இழந்தேன். காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக, கோடை விடுமுறைக்குச் சென்னைக்கு வந்த இடத்தில் மாரடைப்பு. தலையணைமேல் தலை வெடுக்கென ஒரு பக்கமாகச் சாய்ந்தது இன்றும் கண்முன். ஐம்பது நிரம்ப வில்லை. என் முதல் சம்பளத்தை அவரிடம் கொடுத்து நமஸ்கரிக்க இல்லையே- நான் சாகும்வரை எனக்குத் தீரா நெஞ்சக் குறை. என் தந்தை, என் குரு. "தேவராஜ்!” அதன் எதிரொலி ராம்!” இது சமயம் இவனும் நானும் எங்கள் துக்கத்தில் ஒரே தோணி,