பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 & சிந்தாநதி "சாமி வணக்கமுங்க. நான்தான், உங்க பிள்ளைங்க." அற்புதமான மரியாதை புன்னகை கிரண தூலமாய் விசிற்று, நெற்றியில் குழைத்திட்ட விபூதியடியில் புருவ மத்தியில் பலகை போல் சந்தனப்பொட்டு, அதன் கீழ்க் குங்குமம். களையான மனுஷன். “பூஜை புனஸ்காரம் உண்டுபோல இருக்கு!” என்றேன். "ஆமாங்க. பிள்ளையார் பூஜை செய்யறேனுங்க! பூவைப் போட்டு அகவல் சொல்லி அப்புறந்தான் தொண்டையை நனைக்கிறது. அப்படியே வருடம் வருடமா நடக்குதுங்க. ஆண்டவன் புண்ணியத்திலே புளைப்பு குறைவில்லாம நடக்கி. இப்போ சாமி சகவாச மும் கிடைச்சிப்போச்சு எனக்கு என்ன குறைங்க?" பாங்க் வாசலில் அவர் வாகனம் நின்றது. அவர் அப்பா பள்ளியில் படிக்கும்போது வாங்கினதாக இருக்குமோ? நான் கேலி பண்ணவில்லை. குசலப்ரச்னம், முன்னோட்டம் எல்லாம் ஒருவாறு தீர்ந்த பின்: "சாமிகிட்ட பெரிய தயவுக்கு வந்திருக்கேன். ஒரு மில் விற்பனைக்கு வந்திருக்குமாம் போல. இதுவரை நான் சரக்கை இந்தக் கையிலே வாங்கி, அந்தக் கையாலே விக்கிறேன். சாமிக்குத் தெரியும். மில்லை வாங்க ஒத்தாசை பண்ணினால் தானே உற்பத்தி செய்து வியா பாரத்தை விரிவுபடுத்தலாம். தலைமுறைக்கும் சாமிக்குத் தீராக் கடன் குடும்பமே பட்டுடுவோம்.” இந்த ஆபீஸ் மூன்று வருடங்களாகத் தொடர்ந்து நஷ்டத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. வங்கிகள் இன்னும் தேசியமயமாகவில்லை. முதலாளிகள் லாபத்தின் பேரில் தான் குறியாக இருந்தனர்.