16❖சிந்தாநதி
அடுத்து அம்பாளின் மடிதான் அடைக்கலம். அங்கு இடம் என்ன சுலபமா? இருந்தாலும்-
ஓம் புவனேஸ்வரியே நம:
இதைக் காலட்சேப மேடையாக மாற்றுவதாக எண்ணமில்லை. அதற்கு என்னிடம் சரக்கு இல்லை. எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. குங்குமத்தால் அர்ச்சிக் கவோ, மலர்களைத் தூவவோ - ஊஹும். வடமொழி எழுத்து வாஸனைகூடக் கிடையாது. முதுகு நிமிர்ந்து இரண்டு மணி நேரம் தொடர்ந்து உட்காரக்கூடத் திராணி இல்லை. ஆனாலும் உட்காருகிறேன். சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்.
ஓம் மாத்ரே நம: ஆரம்பமே அம்மா.
ஆனால் இன்று-இடறி, இடறி நாமாக்களை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டே வருகையில், திடீரென்று நான் தனியாயில்லை.
ஆனால் பூஜை அறையில் நான் மட்டும்தான். எனக்குத் திடீரென ஒரே பரபரப்பு.
அவள் விளக்கில் இறங்கி, குத்து விளக்கின் தலையில் சூட்டியிருந்த செம்பருத்திப் பூவை எடுத்துத் தன் கூந்த லில் செருகிக் கொண்டது போல-முகம் காட்டவில்லை- தலையின் பின்புறம் - அதையும் ஸ்தூலமாகக் காண்ப தென்பது அத்தனை சுலப சாத்தியமா? சிரமமாகக்கூடச் சாத்தியமா? முதலில் - சாத்தியமா?