பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 169 எனக்கு முன்னவரிடமிருந்து நான் சார்ஜ் வாங்கிக் கொண்டபோது: "இதோ பாருங்க LSR! நீங்கள் நிர்வாக ஆபீசிலிருந்து இப்பத்தான் ஃபீல்டுக்கு வந்து இருக்கிறீர்கள். அங்கே நீங்கள் நடத்திய ஏட்டுச் சுரைக்காய் தர்பாருக்கும் யதார்த்தத்துக்கும் துளிகூடச் சம்பந்தம் கிடையாதுன்னு நீங்களே தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். மாதா மாதம் கடைசித் தேதிக்கு நம் சம்பளம் என்னிக்கும் கெட்டி. இருக்கிறவரை அதை வாங்கிண்டு ஊர் போய்ச் சேருங்கள். ஆகாச கங்கையைக் கொண்டு வர ஆசைப் படாதீர்கள். நான் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் தலையெழுத்து.” ஒப்புக்குத் தலையை ஆட்டினேனே தவிர, என்னு டைய அச்சே வேறு. பிறவி எடுத்ததற்கு மனிதன் தன் முத்திரை பொறித்துவிட்டுப் போகணும். அசட்டுத் துணிச் சலைத் தவிர். ஆனால் துணிவே துணை. நான் என்னை நிரூபிக்க வேண்டாமா? என் கைவரிசையைக் காட்டத் துருதுருத்தது. வங்கி உதவியில், பிள்ளைவாள் வாங்கின விலைக்கு சொத்து லாட்டரியில் முதல் பரிசு அடித்த மாதிரிதான் இருந்தது. மூலக் கட்டடம் தவிர, அதில் ஐந்து கிடங்குகள், நாலு பெரும் கூடங்கள், ராகடிசக் கிணறு, மோட்டார், முப்பது தென்னை, தவிர நஞ்சை வயல், தேய்வு அதிக மாகிவிட்டாலும் தற்சமயத்திற்கு ஒட்டத்தி லிருக்கும் யந்திரங்கள். எப்படியும் மாற்றியாகணும். வங்கி எதற்கு இருக்கிறது? நான் கிளை மானேஜராக எதற்கு இருக்கிறேன்? பிள்ளைவாளுக்கு வெறும் அதிர்ஷ்டம் அடிக்க வில்லை. வாழ்வில் திருப்புமுனை கண்டுவிட்டார். ஆதி நாளில் சைக்கிளில் போய்த் தெருத் தெருவாய் விற்றுக்