பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 சிந்தாநதி கொண்டிருந்தாராம். இந்தத் திருப்புமுனை இருக்கிறதே, அது, எப்படி, எப்போ, எங்கே நேர்கிறது- சிருஷ்டி சூட்சு மமே அதில்தான், அல்ல அதுவேதானோ?. தேரைத் தாவலில் வளர்ந்துவிட்ட அவருடைய வியாபாரத்துக்கு ஏற்றபடி மேலும் வசதிகளை நானே சென்னைத் தலைமை ஆபீஸுக்குச் சென்று பெற்று வந்தேன். ப்ராஞ்சுக்கும் திருப்புமுனைதான். அந்த அரை வருடக் கணக்குக் கட்டின முடிவில், சென்ற மூன்று வருடத் தொடர்ந்த நஷ்டத்தை ஒழித்து லாபம், கொஞ்ச மானாலும் கருப்பு மசி கண்டாச்சு. என் செலவில் அன்று stafக்கு பால் பாயச வினியோகம். தலைமை ஆபீஸிலிருந்து தொலைபேசி மூலம் எனக்கு முதுகில் ஷொட்டு.” பிள்ளைவாள், பேரீச்சம் பழத்துக்குப் போடலாம் போன்ற சைக்கிளில்தான் இன்னும் சவாரி. சர்க்கஸில் யானைக் குட்டி விடுவதுபோல். பிஸினெலைப் பொறுத்த வரை அவர் தலை தோள்களிடையே அழுந்தத்தான் திருகியிருந்தது. ஆனால் கொஞ்ச நாளாக அழுத்தம் ஒன்று புதிதாகச் சேர்ந்தது. -இந்தக் காசோலைப் புத்தகம் இருக்கிறதே, 25 தாள்களிலிருந்து 250 வரை, கணக்கின் விஸ்தாரத்துக்கு ஏற்றபடி, அதற்கே ஒரு கிறுகிறுப்பு உண்டு. அதற்கு நாளடைவில், ஒரு போக்கிரித்தனமும் சேர்ந்துவிடுகிறது. சும்மா வெட்டு, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் பாங்க் சில அவசியமான பட்டு வாடாக்களுக்குச் சலுகை காட்டுகிறது. அடுத்த நாள் ஈடு கொடுத்த அதிகப்படி கணக்கில் கட்டியாகிவிடும் என்கிற நம்பிக்கையில், சைகையில், அர்த்தத்தில்.