பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் * 175 மாசு, முதலில் சாவு என்பதே என்ன ? எல்லைக் கோடு தாண்டிப் போயிருக்கிறீர். உங்களைக் கேட்காமல் யாரைக் கேட்பது? மாசு எனும் தனி மனிதன், என் சினேகிதனுக்குப் படும் துக்கம், தனித் துக்கம், எந்தத் தனித் துக்கத்திலும் சுயநலம் கலப்படம். அவர் இருந்தவரை அவரால் அடைந்த நலங்கள் இனிக் கிடையா எனும் சுயநலம். அம்மட்டுக்குத் தனித் துக்கம் மாசு படிந்ததே. மாசு எனும் மனிதன் இனி இல்லை. மாசு என்ற ஒரு மனிதன்- அவனுடன்தான் என்பாடு, அவனுக்குத்தான் என் பாட்டு. உறவினன் இழப்பைக் காட்டிலும் நண்பனின் இழப்பே மகத்தானது என்பது என் துணிபு. உரிமையென்றும், கடமையென்றும், ரத்த பந்தமென் றும், உறவினரைப் பயன்படுத்துகிறோம். அவரால் பயன்படுத்தப்படுகிறோம். கைம்மாறு எதிர்பார்க்கிறோம். நட்பு அப்படி அல்ல. நட்பில் எந்தவிதமான எதிர்பார்ப் பும் இல்லை. நட்பு நட்புக்காகவே. நட்பு இருவர். இடையில் மட்டுமே. ஆனால் உறவு எனும் பெயரில், சுயநலத்தில் விஷ்தரிப்பு எல்லை கடந்தது. நட்பின் பெரும் ஆச்சரியம் பார்த்தீர்களா? முதல் சந்திப்பிலேயே இனம் கண்டுகொள்வது மட்டுமல்ல, அடையாளமே கண்டு கொள்ளும் அதன் சக்தி ! “முன் னேயே உங்களை எங்கேயோ பார்த்தாற் போலிருக் கிறதே!” என்பது சந்தேகத்தில் லஜ்ஜை முனகல் அல்ல. வாய் விட்டுச் சொல்லாமல், ஆனால், "நாம் இருவரும் ஒருவரையொருவர் எப்பவோ, எப்பவும் அறிவோம்!” எனும் தீர்க்கமான தீர்மானம். அதெப்படி? அதுதான் அதன் ஆச்சரியம். மாசு, இதற்குக் கோடி உம்மிடமே எனக்கு இருக்கிறது.