பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 & சிந்தாநதி ஒரு நாள் இரவு 10.30, 11 இருக்கும். வாசற் கதவைத் தட்டும் சத்தம். திறந்தால் நீங்கள் நிற்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்களை உள்ளே வா என்று அழைப்பதா, வாசலில் நிறுத்தியே பேசுவதா, புரியவில்லை. அன்று மாலைதான் என் தங்கையைச் சிதையில் வைத்து விட்டு வந்திருக்கிறேன். 25 வயதுப் கன்னிப் பெண். இன்னும் எரிந்து கொண்டிருப்பாள். என் தாய் மரண அடிபட்ட விலங்காய் மூலையில் சுருண்டு கிடக்கிறாள். பக்கத்தில் போகவே பயமாயிருக்கிறது. நான் யாருக்கும் சேதி அனுப்பவில்லை. நம் குழாத் தில் யாருக்கும் தெரிய நியாயமில்லை ஆகவே, மாக வுக்குத் தெரியாது. மாசு உள்ளே வர முயற்சிக்கவில்லை. “என்ன மாசு ?” "தெரியவில்லை. என்னவோ உங்களைப் பார்க்கணும் போல் திடீரெனத் தோன்றிற்று. கிளம்பி வந்துவிட்டேன். உங்களைப் பார்த்து விட்டேன். போகிறேன்." அவ்வளவு தான்- இறங்கி விர்ரென்று போய் விட்டீர்கள். இந்த விதிர் விதிர்ப்புக்கு என்ன சொல்கிறீர்கள் ? காரணமே தெரியாது. ஆனால் அடக்க முடியாத இந்தப் பிரிவு, அடையாளம் கண்டுகொள்வதில்லையெனில் அது, பின் வேறு என்? ஹனுமான் முதல் சந்திப்பிலேயே ராமனை அடை யாளம் கண்டு கொண்டதுபோல. அவசர அவசரமாக உடனேயே சொல்கிறேன். நான் ராமன் இல்லை. ஆனால் நிச்சயமாக நீங்கள் ஹனுமான். ஹனுமான்தான், ஆரத்தின் ரத்னகண்டி என மூல காவியமே அறை கூவுகிறது. மாசு, நீங்கள் எனக்குச் சுந்தர காண்டம் எத்தனை முறை பண்ணினாலும், பூர்த்தியாகாத பாராயணம்.