பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 179 ஆவாரா- ராமானுஜர்- பேச்சு அது பாட்டுக்கு அதனிச் சையாக எங்கெங்கோ தாவி நம்மை இழுத்துச் செல்லும், அவசரமாக மூடும். புது வெளிச்சம், புது திருஷ்டிகள், புதுக் கூச்சங்கள், வியப்பாயிருக்கும், ஆனந்தமாயிருக்கும். சில சமயங்களில் பயமாயிருக்கும். ஆதியப்ப நாயக்கன் தெருவில் ஒரே வீட்டில் பதினெட்டு குடித்தனங்கள் நடுவே உங்களதும் ஒன்று. அது ஒரு Community life. நன்றாய்த்தானிருந்தது. நல்லது பொல்லாது சமயங்களுக்கு அத்தனை குடித்தனங்களும் ஒரு குடும்பமாகி விடுவோம் என்பீர். உங்களுடைய சுபா வமே அப்படி. ஆயிரம் சோதனைகளுக்கு நடுவே எனக்கு தெரிந்தது, நீங்கள் உங்களை வெறுத்துக் கொண்டோ, பிறரைச் சுளித்தோ ஏதும் சொன்னதில்லை. ஏறக்குறைய நம்முடைய முப்பத்து மூன்று வருடங் களில் நானும் பார்க்கிறேன், உம்மிடம் அசைக்க முடியாத சில திட்டங்களும் கொள்கைகளும் இருக்கின்றன (ஆம், நீங்கள் இறந்துபோனதாக நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்) உடல் பூஞ்சையானாலும், நீங்கள் பலவான். உங்கள் செயல்படலில் ஒசை கேட்பதில்லை. ஆனால் காரியம் முடிந்த பின், அதைவிடச் செவ்வனே அது இருக்க முடியாது. அப்புறம் வாசகர் பேரவை என்று கூட்டினிர்கள். நச்சு எழுத்தைக் கண்டிக்க; அதற்கு இடம் தந்து போஷிக்கும் பத்திரிகைகளைக் கண்டிக்க; வாசகர்களுக்கு அவர்கள் பொறுப்பை நினைவுபடுத்த, மனச்சாகூவியைத் துாண்ட நீங்கள் எடுத்துக்கொண்ட பிரயத்தனம் சாமானிய மானதா? ஆனால் அதுதான் உம்முடைய தன்மை. "நடக்கிறது நடக்கட்டும். நாலுபேரேனும் விழித்துக் கொண்டால் சரி. அதுதானே உம்முடைய கொள்கை: எப்படி உங்களுக்குச் சமுதாயத்தின்மீது அவ்வளவு நம்பிக்கை?