பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 & சிந்தாநதி மாசு நீங்கள்தான் வாழத் தெரிந்தவர். நீங்கள் தான் செளந்தர்ய உபாசகர். "நீ, நான் உறவின் விஹாலிப்பன்றி வேறு என்ன, செளந்தர்ய உபாஸனை : ஞானம், விஞ்ஞானம், கலை, கடவுள் நம்பிக்கை, வேதாந்தம், சித்தாந்தம் இத்தியா திகள் எல்லாம் உனக்கும் எனக்கும் இடையில்தானே. உனக்கும், எனக்காகத்தானே!” இந்த உண்மை எங்கள் எல்லாரைக் காட்டிலும் நீங்கள் தான் அறிந்தவர், அனுபவமாக. ஒரு முறை பேச்சு வாக்கில் சொல்லியிருக்கிறீர்கள். முன்னும் பின்னுமாக உங்களுடன் பிறப்புகள் பதினைந் தில், உங்கள் பெற்றோருக்கு மிஞ்சினது நீங்கள் ஒண்டி தான் என்று. ஆனால் உங்கள் தாயாருக்கு நீங்களும் இப்போது மிஞ்சவில்லை. உங்களுடைய விசுவ ரூபத்தில், நீங்கள் எல்லோருக்கும் எல்லா உறவும் ஆனவர். மாசு என்று ஒரு மனிதன் இருந்தான். இதுபோதும். ஒரு மனிதன் பதவி சமானிய சாத்தியமல்ல. ஒரு மனிதன் பூமியின் எரு. ஒரு மனிதன் லோகப் பரம் பரையைச் சேர்ந்தவன். எல்லோருக்கும் சொந்தமான வன். There was a man, by name masu- a statementofauthority ஆகம பாஷை. மாசு-ஏ, மாசு-மாசு, மாசு சிந்தா நதி பற்றி எரிகிறது.