பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 & சிந்தாநதி ராஜ்யத்தின் பரவலுக்கு, இங்கு எங்கானும் அவர் வேளை முடிந்திருந்தால் என்ன “ஹோ ஹோ!” “ஜே! ஜே! என இருந்திருக்கும்! ஆனால் பிறந்த ஊர் விசுவாசம், அதுவே விதியாக மாறி, அந்திம வேளைக்குத் தன்னிடம் இழுத்துக் கொண்டதோ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. இப்பவும் சொல்ல முடியாது. நான் ஒருவன்தான் லேட் லதீஃப்ஓ என்னவோ? சுய முயற்சியில், அடித் தளத்திலிருந்து முன்னுக்கு வந்த சூரன் (அல்லது அசுரனா?) இத்தனைக்கும் செக்கில் கூட்டெழுத்தில் தமிழில்தான் கையெழுத்து. அதுவே அவர் பெருமை. "என் தொழிலில் எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு, இதுக்குன்னே வெளிநாடு போய்ப் பட்டத்துக் குப் படிச்சுட்டு வராங்களே, அவங்களுக்குத் தெரியுமா? சவாலை ஏத்துப்பாங்களா?”- மமதையின் புன்முறுவ லுடன் ஒரு தடவை சொல்லக் கேட்டிருக்கிறேன். பிஸினெஸ் நிமித்தமாக வருடத்துக்கு ஒரு முறை இரு முறை மாவட்ட ஆபீஸ்-க்கு வருவார். அடேயப்பா! அந்த வரவேற்பும், போம்போது, Boss லிப்ட்வரை துணை வந்துவிடும் பந்தாவும்- நாடகமே உலகம். ஆஜானுபாகு, எழுபது தாண்டியாச்சு என்று பார்த்தால் நம்ப முடியாது. நாளைக்கு இரண்டு வேளை சவரமோ எனச் சந்தேகிக்கும்படி முகம் மழமழ. சரிகைப் பட்டை தீட்டி ஒடிய பஞ்சகச்சம். முரட்டுத் துணி தோற்றம் தரும் கதர் ஜிப்பா. கழுத்தை ஒரு சுற்றுச் சுற்றி, முன்னும் பின்னும் முழங்கால் வரை தொங்கும் உத்தரீயம், எளிமையின் பகட்டு. ஆனால் உயர்ந்த ரகம், வெள்ளிப் பூண் போட்ட தடி. மறு கையில் தோல் பைண்டிங்கில் ஒரு புத்தகம் (ஒரு சமயம் அவர் “பாத்ரூம்" போயிருந்தபோது, திருட்டுத்தனமாகப் புரட்டினேன். திருவாசகம்). இயற்கையான ஆரோக்யம், மேலும் ஊட்டத்தில் மின்னும் பொன்மேனி. காயகல்பம்,