பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 & சிந்தாநதி நான் ஸ்டேஷனில் இறங்கியபோது, புலர ஆரம்பித்து விட்டது. நவராத்திரி கொலு ஸ்டேஷன் வழி விசாரித்த தில் ஊர் இன்னும் ஒண்ணரை மைல் நடக்கணும். நல்ல வேளை, கைப் பெட்டிதான். நடக்க நடக்க இடமும் தோற்றங்களும் வெளிச்சம் கூடிக்கொண்டே வந்தன. ஒரு தூரம் வரப்பு, கொஞ்சம் மிதிபாதை, அடுத்துச் சற்று அகலமான புழுதி வழி (வண்டிப் பாதை, மறுபடியும். ஒற்றையடி இப்படி, ஒரு வளைவில் சிவன் கோவில் கோபுரம் காட்டிக் கொண்டது, பொதுவாக வறட்சிதான் காட்சி. வானத்தில் சீவனற்ற, ஊர முயன்ற ஒன்றிரண்டு தேசல் மேகங்களும் காய்ந்த பொருக்குகள். இத்தனைச் செழிப்பாயிருந்த மனிதர்கள் இங்கேயா பிறந்து, மடிய மறுபடியும் இங்கேயேவா வந்தான் ? இன்னும் ஆள் நடமாட்டாம் தெரியவில்லை. யாருக் கும் சுவாரஸ்யமில்லை போலும்! இப்பவே கிராமத்தில் யார் இருக்கிறார்கள்? எல்லோரும் பட்டணம் ஒடி வந்து விடுகிறார்களே, பார்க்கவோ, பிழைக்கவோ இழக்கவோ, காய்ந்து கிடந்த பெரிய ஏரிப் பள்ளத்தில் குறுக்கே நடந்து, பனை மரங்கள் காவல் நின்ற மேடு ஏறிச் சற்று நேரம் நின்று என்னைச் சுற்றிப் பார்த்ததும், என் உயரத்தில், அதோ வீட்டுக் கூரைகள் தெரிய ஆரம்பித்து விட்டன. ஆனால் இன்னும் கொஞ்ச தூரம் நடக்கணும். ஏரிக்கரை மேட்டின் மறு தாழ்வில் ஒரு பெரிய கிணறு. அப்புறம் ஒரு வயல் தாண்டி, சற்றுக் கிட்ட நின்ற நாலைந்து மரங்கள். அவைகளில் இரண்டு மரங்களினடி யில் தனித்தனித் துரத்தில் இரண்டு பஸ்பமாய்ப் போன சிதைகள். ஒன்று இன்னும் லேசாய்ப் புகைந்துகொண் டிருந்தது இங்கிருந்தே தெரிந்தது. மறு சிதையெதிரே ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான், பின்னால் கைகளைக் கோர்த்த வண்ணம். சிதையைச் சிந்தித்த வண்ணம். அவன் முதுகு என் பக்கம் திரும்பியிருந்தது. இரட்டை நாடி, குள்ளம்.