பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 185 அவன் சிந்னையின் அந்தரங்கத்துக்கு அவனுக்குத் தெரியாத சாட்சியாக நான் இப்படி நிற்பதுகூட அதன் புனிதத்தைக் கலைப்பதாகும் எனத் தோன்றிற்று. அவரவர் துயரம் அவரவருடையது. பொதுவாகவே எனக்கு ஒரு எண்ணம். சாவு தவிர்க்க முடியாதது. ஆனால் எந்தச் சாவும் வாழ்வுக்கு இழைக் கும் துரோகம். இளம் வயதில் அபகரிக்கப்பட்டவன் இருந்திருந்தால், தனக்கும் சமுதாயத்துக்கும் இன்னும் எத்தனை பயன்படக் கூடியவன்! வயதானவன் மறைவுடன் போயின. அவனுடன், அவனுடைய அனுபவம், அதன் விளைவாய விவேகம், மணிக்கூண்டின் வழிகாட்டல் வெளிச்சம், ஆனால் இத் தனையும் கவைக்குதவாத வாதம். எல்லாம் இயற்கையின் கொப்பறையில் ஸ்வாஹா! பெருமூச்சு. என் நடையைத் தொடர ஒரு கால் வைத்து, மறு அடியும் தூக்கி விட்டது. ஆனால் ஏதோ ஒரு நுண்ணுணர்வு மேலே போக வொட்டாமல் தடுத்து நிறுத்தித் திரும்பிப் பார்த்தேன். நான் பார்ப்பதற்கும் அந்த ஆள் சிதைமேல் பாய்வ தற்கும் சரியாக இருந்தது. முஷ்டித்த இரு கைகளையும் துரக்கிக்கொண்டு சிதைமேல் மிதி மிதியென அவன் ஆடிய வெறியில் சாம்பல் சிதறுண்டு கட்டியு முட்டியு மாகப் பக்கவாடுகளில் விழுந்தது. சிதை சிதைந்தது. உள் கணப்பு தணியவில்லையோ என்னவோ, ஒரு காலைப் பிடித்தபடி நொண்டியாடிக் கொண்டே அவன் திரும்பு கையில்- என்னைப் பார்த்து விட்டான். என் திகைப்பூண்டு கலைந்து நடையும் ஒட்டமுமாக ஒடினேன், நடந்தேன். அப்பா ! ஊரை அடைந்து விட்டேன். நான் நினைத்ததெல்லாம் தவறு. தங்க இடமாவது மண்ணாங்கட்டியாவது! யூகத்தில் கோயில் குருக்கள்