பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 187 செத்த வீட்டில் விடை சொல்லிக் கொள்ளக் கூடாது. எவ்வளவு செளகர்யம் ! -அப்போ, வரும் வழியில் நான் கண்ட காr ? அவரைக் கேட்க முடியுமா? சிரிப்பு வருகிறது. ஒரு பெரிய குடும்பம், ராஜ்யத்தை ஆள்வது போல தான்- அதுவும் லகான் ஒருவன் பிடியில் இருந்தால். சிற்றரசுகளின் சலசலப்பு. தளபதிகளின் கொந்தளிப்பு. பெரிய குடும்பம் Pressure Cooker. மூடி எப்போ வெடிக்கப் போகிறதோ? நானே கேள்வி கேட்டு, நானே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். கேள்விக்கு இந்நாளில் பதில் ஏது? எல்லாவற்றிற்கும் ஒரே பதில், மஹாத்மா காந்தியின் குரங்குப் பொம்மைகளை ஞாபகப்படுத்திக் கொள். சிந்தா நதி ஆழத்தில் காலைச் சுற்றிக்கொண்ட ஒரு கொடி. 蚌 *

を ழ் & o 邻