பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 189 சேந்தாப்போல், மூணு நாள், ஒரு வாரம்னு மின்சாரம் அம்பேல், எங்கள் வீட்டுக்கு மட்டுமில்லே. இந்த வாட்டாரத்துக்கேதான். ஆனால் எங்களுக்கு மட்டும் வந்துவிட்ட தனிக் கஷ்டம்போல் மாமியின் ஸ்பெஷல் புலம்பல். இரண்டு முறை எழுதி வைத்து, நாலு தடவை போல் பிள்ளைகள் நேரே கண்டு பின்னே- என்னா லேயா முடியும்? என்ன பண்ணினால் என்ன, தண்ணிர் வடித்தால் தானே M.E.S. காரன் வருவான் ! அப்பத் தானே கம்பம் ஏற முடியும்? ஏற்கெனவே இங்கே சொல்லியிருக்கேன் போல இருக்கே என் முதுகின் பின்னால், ஆனால் என் காது கேட்கும்படியாக, எனக்கு இரண்டு அர்ச்சனைப் பெயர்கள் உண்டு! ஒன்று Captain of the sinking ship, Loftopstairgy “Gigi'IGLITāavals togirl Gill படிக்காரர்.' ダ அந்த இருண்ட வேளைகளுக்கு, சாமி குத்துவிளக்கு இரண்டு போக, (நல்லெண்ணெய் விக்கிற விலைக்கு) ஒரு பெட்ரூம் விளக்கு, ஒரே ஒரு ஹரிக்கேன் லாந்தர்அதன் சிம்னிதான் இப்போ என் கழுத்துக்கு வந்திருக்கு. "சிம்னியைத் துடைக்கிறேன், ராஜா'ன்னு கிளம் பினேன். போன சீஸன் கரியோட இருந்தது. இருந்தால் என்ன, எத்தனைக்கெத்தனை கரியேறியிருக்கோ, துடைக்கத் துடைக்க அத்தனை பளிச் ஆயிடும். சும்மா, பழனி விபூதி தெளிச்சுத் துடைச்சோம்னா, கும்னு ஆயிடாதா? இந்த ஆசையோடு அவள் துடைக்கமாட்டாள். "ஆமா, வேறே வேலை என்ன? ஆச்சா, போச்சான்னு இழுத் தெறியறதை விட்டுட்டு!” இது ஜெட் யுகம். சிம்னிக்கு நேரம் இல்லை, யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை. ஆனால் எல்லாமே, போர் அடிக்கறது.