பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 & சிந்தாநதி விஷயத்துக்கு வாரும். விஷயம்: ஒரு தடவை துடைச் சாச்சு. இரண்டாம் கோட்டிங் கொடுப்போம்னு, சிம்னியை மடியில் இறக்கிட்டு, எனக்கு இடது பக்கமாகச் சற்றுத் தள்ளியிருந்த விபூதி மடலை எட்டிப் பிடிக்க, இடுப்பு திரும்பிக் குனிஞ்சேன் பாருங்கோ என்ன, எப்படி தெரியலே, மடியிலிருந்து சிம்னி குழந்தை மாதிரித் தவழ்ந்து உருண்டு தரையில் விழுந்து என்பது கூடப் பெரிய வார்த்தை-கிளிங்: தரைமீது இரண்டு விள்ளல் களைத்தான் பார்த்தேன். எனக்குக் கூடச் சத்தம் சரியாக் கேக்கலே, ஆனால் வீட்டு வாசற்படியில் சினிமா எக்ஸ்பிரஸ் படிச்சிருந்த வளுக்கு என்ன செவியோ, குலுங்கக் குலுங்க ஓடி வந்தாள். ஆமாம், கொஞ்ச நாளாவே இரண்டு மூணு பூச்சுக்கூடத் தான். "திருப்தியாப் போச்சோன்னோ?” திருதிருவென விழித்தேன். "திருப்தியாப் போச்சோன்னு கேக்கறேன். இனிமேல் உங்கள் இடத்துக்குப் போய் உட்காந்துடுவேள் இல்லியா?” அவள் சொன்னபடியே, என் அறைக்குப் போய், ஜன்னலோரம் மேடையில் உட்கார்ந்து விட்டேன். நான் வேறு என்ன செய்ய முடியும்? அவள் பாட்டுக்கு இரைந்துகொண்டிருந்தாள். "இப்போ நான் என்ன செய்வேன்? ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமா சிம்னி வாங்கிண்டு வாடா'ன்னு எப்படி விரட்டுவேன்? காலைக் கல்லாக் கட்டியிழுக்கும் இந்த வெள்ளத்துலே, மனசோடே குழந்தையை எப்படி அனுப்புவேன்? (குழந்தைக்கு அடுத்த பிறப்பு நாளைக்கு 25 ஆரம்பம்) இருக்கிற செலவு போறாதுன்னு, மாஸ்க்