பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 & சிந்தாநதி ஆமாம், சிற்றப்பா சிம்னி துடைத்துக் கொண்டிருக் கிறார். குள்ளபட்டா. இடது கை வாகு. வலது கையில் சிம்னியைப் பிடித்துக்கொண்டு, தன் பலம் கொண்ட மட்டும் இடது கையால் அழுத்தி அழுத்தித் துடைக் கிறார்; உடல் பலம் பூரா- மேலே தோள்பட்டையி லிருந்து, கீழ் கால் கட்டை விரலிலிருந்து பலம் அத்தனை யையும் இடது கை விரல்கள் மூன்றுக்கும் கொண்டுவந்து துடைக்கிறார். ஆஸ்துமா வேறே. மூச்சைப் பிடித்துக் கொண்டு அவர் துடைக்கும் தம்மில், விலா கட்டியிழுக் கிறது. ஆனால் விடமாட்டான் மன்னன். வாரா வாரம் தவறாத சடங்கு இது. ஹரிக்கேன் லாந்தர் 2 சுவரொட்டி விளக்கு ஒண்ணு, பெட்ரூம் விளக்கு.3. ஆமாம், சென்னையில்தான் இருந்தோம். ஆனால் எனக்கு 13, 14 வயதில், நான் எட்டாவது படிக்கையில் திருவட்டீஸ்வரன் பேட்டைக் கோயில் குளத்தை ஒட்டிய நாகப்பையர் சந்தில், நாலு குடித்தனங்களில் ஒன்றாய் நாங்கள் குடியிருந்த வீட்டில் மின்சாரமாவது, மண்ணாங் கட்டியாவது கிரோஸின் விளக்குத்தான், விறகு அடுப்புத் தான். "நான் துடைக்கிறேன், சித்தப்பா! ஒரே ஒரு தரம் சித்தப்பா !” "அதெல்லாம் வேண்டாம். நான் துடைச்ச வெளிச் சத்தில் படிச்சு, அதே மாதிரி ப்ரைட்டா மார்க்கை வாங்கு. Brightன்னா அர்த்தம் தெரியுமோன்னோ?” ஒரு சாதாரணப் பேச்சில் கூடப் படிப்போடு எப்ப டியோ முடிச்சுப் போட்டுவிட்டார். பெரியவாளின் வழி .[94giے