பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 197 ஸ்ம்பவாமி யுகே யுகே பாடுகிறேன். 女 袁 女 சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில், காலைக் காப்பிக்குப் பின்னர், சுமார் ஒன்பது மணி வாக்கில், அவ்வில்லத்தரசி பால் கலந்த சூடான பானம் ஒன்று கொணர்ந்து கொடுத்தாள். பஹா ருசி. தெரிந்த மாதிரியுமிருந்தது. ஆனால், வெகு வெகு முன்னால். சட்டெனப் பிடிபட வில்லை. என் திகைப்பைக் கண்டு புன்னகை புரிந்தாள். “பொரிக்கஞ்சி. ஒண்னும் பண்ணாது, சாப்பிடுங்கள், சமையல், ஆகும்வரை தாங்க வேண்டாமா?” சொல்லிவிட்டுப் போய்விட்டாள். பொரிக்கஞ்சி. அப்பா, எத்தனை நாட்கள், வருடங்கள்! “யாழ். நான் பார்த்ததில்லை. ஆனால் எனக்கு மிக்கப் பிடித்த சொல். இவ்விரண்டு இடையினங்களும் உச்சரிப்பிலேயே இழைந்து நினைவே மீட்டுகின்றன. நினைவின் யாழ். ★ 女 ★ அண்ணாவுக்கு அதே ஒன்பது மணிக்கு, ஒரு திருகு கூஜாவில் அம்மா கொடுத்த பொரிக்கஞ்சியை எடுத்துச் செல்வேன். மதிய உணவுக்குப் பதினொன்றரை மணிக்குத் தான் பள்ளியிலிருந்து திரும்புவார். அதுவரை அண்ணாவுக்குத் தாங்க வேண்டாமா? சிற்றுண்டி உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. அண்ணாவுக்கு ஆஸ்துமா. ட்யூஷனிலும், உத்யோகத்திலும், பட்டணத்தில் கை நிறையச் சம்பாதித்துக் கொண்டிருந்தவர். நோய் காரண மாகவே, ஒரு கிராமத்தில் ஒரு ஜில்லா போர்டு ஆரம்பப் பள்ளியில், எளிய சம்பளத்துக்குப் புகல் தேடும்படியாகி