பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 & சிந்தாநதி - விட்டது. வைத்தியன் விரட்டிவிட்டான். சென்னையில், கம்பீரமாக யானைபோல் இருந்த அண்ணா, அவ்வளவு சின்னப் பையன் என் கண்ணெதிரேயே, நோய் வாயில் விலா எலும்புகள் முட்ட, நிழலாகத் தேய்ந்துவிட்ட அண்ணா நோயுடன் மனமும் சேர்ந்து அவரை எப்படி அரிந்திருக்கும் என்று உணர்கிறேன். அண்ணாதான் எனக்குப் பாடமும் சொல்லிக் கொடுத்தார், வைராக்கியங்களை வாழ்ந்து காட்டி, என்ன ஆளாக்கியவள் என் தாய். அண்ணா என் தாய். நான் பாக்யவான்.

  1. 女 ★ உலகிலேயே சிறந்த உபாத்தியாயர் என் அண்ணா தான்.

என் தந்தை என்பதால் அல்ல. பின்னால் நான் முறைப்படி பள்ளியில் சேர்ந்தபோது, பல டீச்சர்களிடம் பாடம் கேட்டிருக்கிறேனே! என் பிள்ளைகளும் அவர்கள் வாத்தியார்களிடம் கற்று வந்ததைப் பாடம் என்கிறார்கள். தலையும் எடுத்தாச்சே! சரி, என் கண் சாயம் தோய்ந்ததாகவே இருந்து விட்டுப் போகட்டுமே, அதனாலேயும் தான் என்ன? எனக்குச் சொல்லிக் கொடுக்க மிகவும் பிடிக்கும். அந் நேரத்துக்கு ஆத்மாவின் இதழ் இதழாக விரிவின்பம். அப்பா...! ஆனால் கடை விரித்தேன். வருவோர் யாருமிலையே! 'பரீrை பாஸ் பண்ணுகிற டெக்னிக் வேறு அப்பா! நீங்கள் சொல்லிக் கொடுக்கிற வழி இப்போ செல்லாது: