பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 8 199 கேட்டுக் கொள்கிறேன். புழுங்குகிறேன். இப்படிக் கேட்டுக் கொள்ளும் காலம் இது. அண்ணா கணக்கும் ஆங்கிலமும்தான் கற்றுத் தந்தார். "மற்றதை நீ பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபின் படித்துக் கொள். இது இரண்டும் தெரிந்துகொண்டாயானால், மற்றதெல்லாம் தானாகவே வரும்!” என்று விட்டார். அந்த மட்டுக்கும் பிழைத்தேன். இவை இரண்டுக்குமே நேரம் போதவில்லை. அண்ணா அப்படிப் பிழிந்தெடுப் பார். இதென்ன காலை ஏழிலிருந்து இரவு எந்நேரமோ அதுவரையிலுமா? நோயில் அவஸ்தைப் பட்டுக் கொண்டே என்னோடயும் முட்டிக் கொண்டார். “It is all duty, my boy! I do mine, you do yours.” அண்ணா ஆங்கிலத்தில்தான் பேசுவார்; என் நன்மைக்காக. All work and no play makes jack a dull boy (Not necessarily. It makes him also cunning). நான் புத்தி மந்தம் அல்ல. oh, yes. என்னைப்பற்றி எனக்குத் தைரியமாகத் தெரியும். ஆனால் பத்து வயதுப் பையன். கணக்கே! கசப்பே கழுத்தறுப்பே ! உன்னை எவன் படைத்தான்? பாகற்காயின் ருசி இப்பத்தான் தெரிகிறது. எல்லை யற்றதையும் எல்லைப்படுத்தும் கணிதம், தெய்வத்தையே தன்னுள் அடக்கி ரீ சக்ரம் என்று. ஒரு நாள் மாலை அண்ணா எங்கோ அவசரமாகப் போக வேண்டியிருந்தது. நான் செய்ய, கணிதப் புத்தகத் தில் ஐந்து கணக்குகளைக் குறித்துக் கொடுத்துவிட்டும் போய்விட்டார்.