பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சிந்தாநதி வாசல் திண்ணையில்தான் பாடம் நடக்கும். வீட்டுக்குறடுக்கெதிரிலேயே பெரிய புற்றரை. வானின் மேலக் கோடியில் ஒரு பிரம்மாண்டமான தங்கத் தாம்பாளம் சுழன்றது. அது வீசிய பொன்னொ ளியில் புல் தரையில் என் கண்ணெதிரே பையன்கள் பளிஞ்சடுகுடு விளையாடுகின்றார்கள். முருகன், ஆறுமுகன், கோதண்டன், பழனிவேல், முனி சாமி, சின்னாண்டி நடேசன், குப்புசாமி, ஷண்முகம்இன்னும் பெயர்கள் மறந்து போச்சு. நடேசனைக் கட்டிப் பிடிச்சுக் கீழே தள்ளிவிட் டான்கள். “குடுகுடு” தம் பிடித்தபடி அவன் அத்தனை பேரையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு, கோட்டைத் தொட நகர்கின்றான். விழி பிதுங்குகிறது. பரபரப்புத் தாங்க முடியல்லே. போட்டது போட்ட படி, படியிறங்கி விட்டேன். எச்சரிக்கையில் அலறுவது போல, கணக்கு நோட்டின் பக்கங்கள், காற்றில் படபட வென்று அடித்துக் கொண்டன. அண்ணா திரும் புகையில் இரவு வந்துவிட்டது. கிராமத்தில்தான் இரவின் வருகையைத் தனிச் சம்பவ மாகப் பார்க்க இயலும். இரவின் புருஷன் இருளின் சால்வையைக் கம்பீரமாக வீசிப் போர்த்துக்கொண்டு துழைகிறான். வீடு என்னவோ பெரிதே யொழிய உருப்படியா இரண்டு அறைகள் தேறாது. லங்கிணி வாய்போல், வானைப் பார்த்த பெரிய நடு முற்றம் மிச்சமெல்லாம் தாழ்வாரம், கூடம். மண்ணெண்ணெய் விளக்குதான். அதுகூட வீடு முழுக்க வெளிச்சமாகக் கட்டுப்படியா காது. புழங்குமிடம் தவிர மிச்ச இடங்களில் கோயில் பிராகாரத்தின் அச்சம் தரும் இருள், நிழல்கள். 'Ram! என்ன பண்ணினே ?”