பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 201 "கணக்கெல்லாம் போட்டுட்டேம்பா !” “ 9l-, you sound bright, tired--e g)(555. 5Tramoré5é5, பார்க்கட்டுமா? இல்லை, கொண்டு வா- பார்த்துடறேன். அப்புறம் ஆறின கஞ்சி ஆயிடும்.” அதுதான் அண்ணா. “Yes, wes' தனக்குள் முனகிக் கொள்கிறார். நான் கணக்குச் செய்திருக்கும் வழியை அடி அடியாகப் பார்த்துக் கொண்டே "That is right, ஹ்ம், கொஞ்சம் கவனமாயிருந்துட்டே, ராம்-உன்னை மிஞ்ச யாரும் இல்லை. Good- good, இது என்ன?" மூணு கணக்குத் தாண்டி யாச்சு. நாலாவதில் குழம்புகிறார். அவர் புருவங்கள் புரியாமல் நெரிகின்றன. “ஏண்டா, இது எப்படி வந்தது:” எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. மூன்றோடு, நாலையும் ஐந்தையும் மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டு போய்விடுவார் என்று தினைத்தேன். அடுக்குள்ளிலிருந்து வற்றல் குழம்பு வாசனை கூடத்தைத் தூக்குகிறது. "இதென்ன நடுவிலே gap, விடை மாத்திரம் எப்படி வந்தது? நாலும் அப்படி, அஞ்சும் அப்படி என்னைப் பார்த்து வினாவில் விழிக்கிறார். நான் திருதிருவென விழிக்கிறேன். "ஓ!” புதிர் அவருக்குப் பிரிஞ்சு போச்சு. அவர் கண்கள் அதிர்ச்சியில் என்மேல் விரிந்து பெரிதாயின. "MY God ராமாமிருதம், நீயா?” அண்ணா இப்படித் துடித்துப் போவார் என்று நான் நினைக்கவில்லை. "அம்மாப் பெண்ணே !”