பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 & சிந்தாநதி அம்மா அடுக்குள்ளிலிருந்து வெளியே வந்து வாசற் படியில் நின்று என்னை மெளனமாகப் பார்க்கிறாள். எனக்குப் பரிந்துகொண்டு அம்மா எப்பவுமே வந்த தில்லை. அவளுக்கு எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. ஆனால், அவளுக்குத் தெரியாததே இல்லை. அண்ணா என்னை ஒன்றும் செய்யவில்லை. எழுந்து சென்று கூடத்து அலமாரியில் இருந்த படத்துக்கெதிரே நின்று கன்னங்களில் போட்டுக்கொண்டார். “பெருந்திருவே, நீதான் என் பிள்ளையைக் காப்பாத் தணும்! தெரியாவிட்டால் சொல்லிக் கொடுக்கலாம். துரோகத்துக்கு என்ன செய்வேன்?” இப்போ தெரிகிறது. எனக்குச் சொல்லிக் கொடுப்பதில் அண்ணா எப்படித் தன்னை ஆஹாதியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று. அப்போது தெரிந்தது அண்ணா நிலை கண்ட ஒரு திகில்தான். “என்னை மன்னிச்சுடுங்கோ'ன்னு விசும்பினேன், “மன்னிச்சுடுங்கோ: மன்னிச்சுடுங்கோ' மந்திரம் மாதிரி. உடலின் பரவாட்டல் தாங்காமல், கூடத்தில் அங்கு மிங்குமாகப் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு அலைந்தார். யுகம் கடந்தது. அம்மா பார்த்துக்கொண்டு நிற்கிறாள். gr(35T Gusrāsoruñai), “I may forgive you, but I can't forget what you have done." வார்த்தைகளின் பொருளைக் காட்டிலும் அந்தக் குரலில் கசிந்த துயரம் தாங்க முடியவில்லை. விக்கி விக்கி அழுதேன். ஆனால், அது அந்நாள். இருங்கள் யாழின் மீட்டல் ஒயவில்லை.

9. $. *్య• •్భ శ o