பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஒரு மீட்டல் முன்பெல்லாம், யார் யாரை ஏமாற்றிக் கொண்டிருந் தாலும், அநியாயம் இழைத்துக் கொண்டிருந்தாலும், அவனவனுக்கு மனச்சாr என்று ஒன்று இருக்கிறது. அதனுடைய உறுத்தல் விடாது. அதையே ஒரு ஆறுதலாக, தேறுதலாகச் சொல்வதுண்டு, சொல்லிக் கொள்வதுண்டு. கடவுள், அவர் இருக்கிறாரா இல்லையா என்கிற அடிப்படைக் கேள்வி, வாழ்க்கையின் கடைய லில் வயதுக்கு வயது பல கட்டங்களில், பல உருவங்கள் மாறித் தற்சமயம் என் மனதில் அதன் தீர்மானம் என்ன வென்றால், அவன் எங்கும் நிறைந்திருக்கும் முறை, அவனவன் மனதையே அவனவனுக்குச் சாகதியாக நிறுவியிருப்பதுதான். மனச்சாகவிப்படி கேட்கிறானோ இல்லையோ அவன் எண்ணத்தின், செய்கையின் நியாய, அநியாய உணர்வைத் தப்ப முடியாது. அந்த உணர்வே தான் ஆண்டவன். வரவர நடப்பைப் பார்த்தால், மனச்சாகதியே கொல் லப்பட்டு விட்டதோ, அல்லது அதன் குரல் எட்டாத ஆழத்தில் புதைக்கப்பட்டு விட்டதோ என்று திகைப்பா யிருக்கிறது! அதனாலேயே மனோதைரியம் கலகலத்துப் போய்விடுகிறது.