பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 211 பாடத்தின் நடுவே, என்னைத் திடுக்கிட வைத்தது. "இல்லையே, அண்ணா!” ஒரு தட்டுத் தடங்கல் யோச னையின்றி உடனேயே மறுப்பு- எந்த விஷயத்துக்கும் மறுப்புத்தான். அந்த வயதுக்கே உரித்தானதா? "உதட்டோரம் கறையிருக்கே!” உடனேயே பரபர வெனத் தேய்த்துவிட்டேன். சனியன், இப்படியும் காட்டிக் கொடுக்குமா என்ன? "இல்லை, அண்ணா, நான் பாக்குத் தின்கல்லே. நீங்கள் பார்த்துட்டுத்தானே இருக்கேள்! நான் இங்கே விட்டு எங்கே நகர்ந்தேன்?" அண்ணாவின் பார்வை, சிந்தனையில் என்மேல் ஆழ்ந்தது. பாடம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால், அவர் கண்களில் ஏதோ மூட்டம் கண்டுவிட்டது. ஆனால் நடத்தியபடியே, ஏதோ கவலை. இப்போது பின்னோக்கில், அசப்பில் அண்ணாவுக்கும் ஜவாஹர்லால் நேருவுக்கும், முக ஜாடையில் சில ஒற்றுமைகள் தெரிகின்றன. டர்பன் அடியில் அண்ணா முகம். காந்திக் குல்லாய் அடியில் நேரு முகம். அதே நீண்டு குறிகிய முகம். மெல்லிய நாசித் தண்டு. லேசாகக் கசப்பு வார்ப்படத்தில் வாய். கீழுதடு சற்றுக் கனத்து. அதே மோவாய். நேருவின் கண்கள் கவிஞனின் கண்கள். அண்ணாவின் கண்களிலும் சோகத்தின் தேக்கம். நோய் அவரை வாழ்க்கையில் உச்ச கட்டத்தில் சறுக்கி விட்ட துரோகம், அதனால் குழந்தைகளுக்கும் பாதிப்பு என்கிற கிலேசம், அண்ணாவும் நல்ல நிறம். பாடம் முடிந்த தருவாயில்