பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 & சிந்தாநதி "அப்போ நீ பாக்குத் தின்னல்லே?" "இல்லவே இல்லை அண்ணா!" பெருமூச்செறிந்தார். எழுந்து உள்ளே போய் விட்டார். 'நான், தும்பை அறுத்துக்கொண்ட கன்றுக்குட்டி போல், திண்ணையிலிருந்தே அவுட் பாஸ் ஆகிவிட் டேன், என் நண்பர்களைத் தேடிக்கொண்டு. முருகன், சின்னாண்டி, ஷண்முகம். ஆனால், விளையாட்டில் மனம் ஊன்றவில்லை. கனத்தது. பொய் சொல்லியிருக்க வேண்டாம். அவசி யமேயில்லை. ஆனால், கேட்டவுடன் மறுத்துவிட்டேன். அதனால், கடைசிவரை சாதிக்க வேண்டியிருக்கு. நான் வீடு திரும்பியபோது, வாசலுக்கெதிரே மைதா னம் கும்மிருட்டு. என்னுள் வெளிச்சம் இல்லையே! முதுகின் பின்னால் கை கோர்த்தபடி, அண்ணா, தரைமேல் குனிந்த முகத்துடன், கூடத்தில் முன்னும் பின்னும் உலாவிக் கொண்டிருந்தார். அது அவருடைய Exercise. கூடம் மூலைக்கு மூலை முப்பதடி அப்போ முன்னும் பின்னும் அறுபது அடி. அப்படி நூறு முறை முன்னும் பின்னும் ஆறாயிரம் அடி. ஒரு மைலுக்குமேல் நடந்த மாதிரி. நேரே அடுப்பங்கரைக்குச் சென்றேன்.என் தம்பிமார் களும் தங்கையும் ஏற்கெனவே கலத்தில் உட்கார்ந்திருந் தார்கள். கபகயன்னு நல்ல பசி. நிஜம்மா? பின்னே அள்ளி அள்ளிக்கப்பறேனே, அதன் பேர் என்ன? ஆமாம், அதன் பேர் என்ன? ஏன் இப்படியெல்லாம் கேள்வி தோணறது?