பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 213 கையலம்பப் போனபோது அண்ணா கூடத்தில் இல்லை. நல்லதாப்போச்சு. அண்ணா வரதுக்குள் துரங்கிட்டா, அண்ணா பாடத்துக்காகக்கூட எழுப்ப மாட்டார். அது அவருடைய கொள்கை அம்மா கூடத்தில் உட்கார்ந்து, கைக்குழந்தையை, எடுத்துவிட்டுக் கொண்டிருந்தாள். லாந்தர் வெளிச்சத் தில், அவள் முகம் மட்டும் ஏற்றிக் கொண்டாற்போல், ரோஜா கலர் அடித்தது. ஈரக் கையை இடுப்பு முண்டில் துடைத்தபடி திரும்பு கையில், 22 "ராமாமிருதம் அம்மா பக்கம் திரும்பினேன். "நீ பாக்குத் தின்னையா!' என் தலை மேலும் கீழும் அசைந்தது. இந்தச் சன்னி தானத்தில், அந்த மறுப்பு ஏன் எழவில்லை? "ஏன் அதை அண்ணா கேட்டபோது சொல்லலே? 'என் பிள்ளை பொய் சொல்றாண்டி'ன்னு அண்ணா என்னிடம் சொல்லி வருத்தப்படறபோது எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா? அண்ணா வந்ததும் நீயே போய் ஒப்புக்கொள். கையால் களைந்து எறியறதைக் கோடாலியால் வெட்டறவரை வளர்த்து விட்டுக்காதே." "பயமாயிருக்கே, அம்மா!” என் குரலில் கண்ணிர் துளம்பிற்று. - "பார்த்தயா, இதுக்குள்ளேயே, குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்பு எந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது! நம்மைப் பத்தி எல்லோரும் நல்ல முறையில் ஆச்சரியப்படனுமே ஒழிய, இன்னாரத்துப் பிள்ளையா இப்படிச் செஞ்சான்' என்று கெட்ட முறையில் ஆச்சரியப்படக் கூடாது.