பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 215 அவர்கள் உணரவில்லை. ஆகவே, என் தகப்பனார் திண்ணையிலிருந்தால், நான் கொல்லைப்புறம். அவர் புழக்கடைக்கு வந்தால், நான் வாசல் பக்கம். இப்படியே நாங்கள் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள முடியாமல், ஒட்டாமலே போய்விட்டது. "ஆனால், அவர் சாகிற சமயத்தில், அந்தக் கடைசி நேரத்தில் அவர் என்மேல், இதுவரை உள் அடக்கி வைத் திருந்த பாசமெல்லாம் பீறிட்ட போது, மனம் கலந்து பேசக்கூட நேரமில்லை. ஐயோ! இவ்வளவு அற்புதமான உறவை, இரண்டு பேரும் அனுபவிக்க முடியாமல் வாழ் நாள் பூரா வீணாப் போச்சே!” என்று நான் பட்ட வருத்தம் எனக்கும் என் குழந்தைகளுக்குமிடையே நேரக் கூடாது என்று அப்போதே பிரதிக்ஞை எடுத்துக் கொண்டேன். நான் உன்னிடம் அப்படி இருக்கையில், அனாவசியமா நீ பொய் சொன்னால் எனக்குத் தாங்குமா? பயமே நம்மிடையில் கூடாது. ஒன்று வைத்துக்கொள். என்னைவிட நீதான் எனக்கு உசத்தி. தன் பிள்ளை மூலம் தான் தகப்பன் பிரகாசம் அடைய எதிர்பார்க்கிறான். ராமன் மூலம் தசரதன் பிரகாசம் அடைந்த மாதிரி.” அண்ணா சொன்னதை யெல்லாம் நான் புரிந்து கொண்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால், சொல் வேகத்தில் இருளில் அண்ணா என் தோளைப் பற்றியபோது, அந்த உள்ளங்கை உஷ்ணம் இப்பக்கூட உணர்கிறேன். வாசலுக்கெதிர் வெட்ட வெளிமேல், வான் குடையில் நrத்ரங்கள் நாலைந்து திடீரென்று ஒளி பிதுங்கின. அதுவும் நினைவிலிருக்கிறது. சிந்தாநதி ஊடே, ஆள் இல்லாத் தனி ஒடம். 铃 * శ్మి, •్మతి 4. •