பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. கோவர்த்தன் சேப்பாக்கத்தில், சி. என். கிருஷ்ணஸ்வாமி ரோடில் நாங்கள் குடியேறிய வீடு ஒரு முஸ்லிமுக்குச் சொந்தம். முப்பது, முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் வரலாறு வீட்டின் முகப்பு, பார்வையில்லாமல், நொண்டிக் குதிரைபோல், சரிவாகத் தோற்றமளித்தாலும் உள்ளே நல்ல விசாலம், இரண்டு கட்டுகள். விசாலமான கூடங்களில் எதிரும் புதிருமாக அறைகள். வானம் பார்த்த பெரிய நடு முற்றம். அதில் ஒரு மருதாணி மரம். இங்கு குடியேறின புதிதில் நாங்களும் நொண்டிக் குதிரையாக ஒரு கால் ஒடிந்திருந்தோம். முந்தின வருடந் தான் உற்ற வயதில் என் தம்பி, ஒரு கலியானத்துக்குத் திருச்சிக்குச் சென்றவன், அங்கே மாரடைப்பில் போய் விட்டான். அதற்கு முதல் வருடம் கலியாணத்திற்கிருந்த தங்கை, மெனெஞ்சட்டிஸ். அடிமேல் அடிக்கு யாரைக் கேட்பது.? நம் சவுகரியத் துக்கு, நம் பயத்தில், திருடனுக்கும் கன்னக்கோல் சாத்து வதற்கு ஒரு சுவர் மூலை வேண்டுமே என்கிற முறையில் தானே நமக்குக் கடவுள் வேண்டியிருக்கிறான். உத்தியோகத்தில் என் தம்பி, வெகு வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த புள்ளி. அவன் இறந்து ஆறு மாதங்களுக்கு என் வலது தோள் பூட்டு, ஊமையாக