பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 21 வியாபித்துக் கொண்ட இருளின் இதவில், ஒரு சின்னச் சம்புடத்தில் உருளும் இரு ஜின்டான்மாத்திரைகள் போல், ஒரே கோசத்தில் இரண்டு உயிர்த் தாதுக்கள் போல், பறவைக் கூடில் இரு குஞ்சுகள் போல், எங்கள் உள்ளங்களின் நெருக்கத்தில், ஒரு தனிக் கதகதப்பில், அது தந்த மதோன்மத்தத்தில் திளைத்துக் கொண்டிருந் தோம். இந்நிலை எங்கள் நட்பின் தன்மையால் அல்ல. இது அந்த சமயத்தின் மஹிமை. சிருஷ்டியின் ஓயாத நூற்பில், இரண்டு இழைகளாக இழைத்து போய்விட்டோம். அல்லது அது தன் கோலத் தில் எங்களை இழைத்து விட்டது என்று சொல்லட்டுமா? ஆனால் இதுபோன்ற நேரங்கள், காய்ப்புக் öf*ö” நினைவைச் சூடிவிட்டுப் போமே தவிர, நம்மோடு காயமாக இருத்தி வைத்துக் கொள்ளற் பாலன்று. சற்று நேரம் கழித்து- எந்நேரமோ? அவர் புழக்கடைப் பக்கம் போனார். விளக்கைப் போடாமலே, நான் அந்த அறையுள் இன்னொரு அறையுள்- இல்லை, அதன் வாசற்படியிலே நின்று சுற்றி நோக்கினேன். கட்டில், ஜன்னலோரமாக, அதே மூலையில்தான் மெத்தையும், இரண்டு தலையணைகளும்- அவைகளும் அதே தாமோ? மற்றப்படி பண்டங்கள், நாற்காலிகள், ஏற்கெனவே நான் அவைகளைப் பார்த்திருந்த இடங்க ளும் நிலையும் பெரிதும் கலைந்த மாதிரித் தெரியவில்லை. "அம்மாவைத் தேடறேளா?” என் பின்னாலிருந்து, என் செவியோரமாய், பேச்சே ஒரு மூச்சு, தன் தாயாரின் மறைவை அவர் தெரிவிக்கும் விதமா? எப்படியும் இந்தக் கேள்விக்கு என்ன பதில்?