பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 219 மறுநாள் நான் வீடு திரும்பும் வேளைக்கு சந்துச் சுவருக்கும், அடுத்த வீட்டுச் சுவருக்கும் இடையே, மாட் டுக்கு அடக்கமாக, கன கச்சிதமாக, ஒரு ஒலைக் கூரை எழும்பியிருந்தது. வரதன் சகல கலா வல்லபனா அம்மா கையில், அலாவுதீனின் அற்புத தீபமா? அன்றிலிருந்து குடும்பத்திற்கு மந்திரக்கோல் நாட்கள் வந்துவிட்டன. 'உன் கண்ணை நீ நம்பாதே நாட்கள். முதலில் எங்கள் பால் செலவுக்குக் கட்டிக் கொண் டது. நல்ல காப்பி. நல்ல பால், நல்ல மாடு. இரண்டு மூன்று மாதங்களுக்கெல்லாம் என் உதவி இல்லாமலே இன்னொரு மாடு; அடுத்த இரண்டாம் மாதம் இன் னொன்று. அப்படியும் வளர்ந்து விட்ட வாடிக்கைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. - பட்டணத்தில், அதுவும் திருவல்லிக்கேணியில், அதுவும் வாடகைக்குக் குடித்தனமிருக்கும் இடத்தில், அதுவும் பார்ப்பான் வீட்டில் மாடா ? அதுவும் ஒண்ணுக்கு மூணு என்னாலேயே நம்ப முடியலியே, உங்களால் எப்படி முடியும்? தினப்படி மேஞ்செலவுக்கு, ஏன் சில கணிசமான செலவுகளுக்கே பணத்துக்குப் பஞ்சமில்லை. பால் கறக்க அம்மா ஒரு பித்தளைக் குவளை வாங் கினாள். அதைப் பொன் என வரதன் தான் தேய்ப்பான். கூடத்தில் ஒரு சின்ன பெஞ்ச் போட்டு அதன் மேல் துணி போட்டு மூடி, பால் நிறைந்த எவர்சில்வர் அடுக் கெதிரே பித்தளை ஆழாக்குடன் அம்மா அமர்ந்து விடுவாள். அது எப்படி, அம்மா உட்கார்ந்தால் மட்டும் முக்காலியே சிம்மாசனம் ஆகிவிடுகிறது? வந்து வாங்கிக்கொண்டு போவார்கள். 'பாட்டி, மாமி, ஆத்தே, அத்தை, ஆயா!” அவரவர் வயதுக்கேற்ற படி அம்மாவை விளித்துக்கொண்டு.