பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 & சிந்தாநதி அம்மாவைப் பார்க்கையில் அமைதியின் சிறகு மெத்தென என்மேல் இறங்கிற்று, வெகு நாட்களுக்குப் பிறகு பரவாயில்லை. முழு நேரமும் அம்மா தன் நெஞ்சு ரணங்களை நினைத்துக்கொண்டேயிருக்க அவளுக்கு நேரம் இருக்காது. “என்னம்மா, நீங்க பால் வியாபாரம் பண்றிங்களா, மாரியாத்தாளுக்கு கஞ்சி வார்க்கறீங்களா? நீங்க ஊத்தற அளவும், பால் திடமும் அப்படித்தானே இருக்குது! அரிசி பருப்பாட்டம் ஆழாக்கில் குவிஞ்சி நிக்குதே!” வரதனோ, கவிஞனோ, எரிச்சலோ! அம்மா புன்னகை புரிவாள். ஆனால், அவனுக்கு ஆத்திரம் தனியாது. "இதோ பாருங்கம்மா, இப்படி வார்த்தால் வாங்கினவங்களுக்கு ஜெரிக்காது. முதலில் இதைப் பாக்கிற எனக்கு ஜெரிக்கலியே! மாட்டுக்கு காம்பிலே புண் வந்துவிடும்!” அம்மா சிரிப்பாள். அழகாகிவிடுவாள். நல்ல வரதன். மாடு மூணு என்று பேரே ஒழிய மருந் துக்கும் கொசு கிடையாது. மாடுகளைத் தினம் இரண்டு முறை குளிப்பாட்டுவான். கொட்டகையில் கடப்பைக் கற்கள் அவன் அலம்பும் சுத்தத்தில் கரும் பளிங்கென மின்னின. எங்கள் கன்றுக்குட்டிகள் ஜன்மமெடுத்த இரண்டு மாதங்களுக்குள் அவைகளில் துணியும் பஞ்சும் அடைக்க வில்லை. குழந்தைகளை முட்டித் தள்ளி, இனி வீட்டுக் கடங்கா என்று தெரிந்தபின், விற்கப்பட்டன. ஒரே ஒரு கிடேரி. அதை வரதனுக்கு இனாமாக ஒட்டிவிட்டாள், அவன் அதை விற்கக்கூடாது என்று வாக்கு வாங்கிக் கொண்டு. -