பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் * 221 சாணி, அன்றன்றே, தட்டுவோருக்கு இனாமாக வினியோகமாயிற்று. அந்த ஆறு, ஏழு வருடங்களுக்குக் குடும்பம் பச்சை யாக வாழ்ந்ததெனில், அடிப்படைக் காரணம், அம்மா வின் பால் ராசியும், வரதன் அம்மாமேல் வைத்திருந்த அலாதி விசுவாசமும்தான். வீட்டில் பால் பகrணங்களாகப் புழுங்க ஆரம்பித்தன. மோர்க் குழம்பு, அவியல் தவிர. அவியலிலேயே எனக்குத் தெரிந்து மூணு திணுசுகள் இருக்கின்றன. தெரியுமா? திருநெல்வேலி டொக் அவியல், மலபார் அவியல், Madras அவியல், ஆம், நான் உணக்கைக்காரன்தான். பங்கஜத்துக்குக் கபாலி பிறந்ததும், இங்கிருந்து ஒரு சீரே போயிற்று. 'தாயில்லாப் பொண்ணுடா!' "நான் ஒண்ணுமே சொல்லவில்லையே, அம்மா !” "சொல்லித்தான் பாரேன்!” புன்னகையில் சோகம், கண்களில் விஷமச் சிமிட்டல். அம்மா நடந்துதான் மார்க்கெட்டுக்குப் போவாள். ஆனால், திரும்பி வருகையில் ரிக்ஷாவில் வந்து இறங்கு வாள். எடுத்துக்கொண்டு போன பை போதாமல், இதற் கென்றே வாங்கிய புதுக் கூடையில் காய்கறிகளுடன். "போகும்போது எண்ணமே இல்லேடா, ஆனால், அங்கே என்னை சுற்றிப் பச்சைப்பசேல் என்று பார்த்ததும்.” அந்தத் திகைப்பில் அம்மா முகம் குழந்தைபோல் ஆகிவிடும். "இருந்துட்டுப் போகட்டும். தின்கவா மனுஷாள் இல்லே? பச்சையாக் கொடுத்தாலும் போச்சு. முடியாத வாளுக்குப் பண்ணியே கொடுத்தால் போச்சு.”