பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 223 வரதன் ஒட்டிக் கொண்டு வந்து கட்டிவிட்டு அம்மா காலில் விழுந்துவிட்டு, விடு விடெனப் போய்விட்டான். இருந்தால், உடைந்து விடுவானோ என்கிற பயம். மாம்பலம் வந்த பிறகு எங்கள் கால வட்டமே மாறி விட்டதென்றுதான் சொல்ல வேண்டும். மாடுகளுக்குப் புது இடம் ஒத்துக்கொள்ளவில்லையோ, புது இடையன் ஒத்துக் கொள்ளவில்லையோ? ஆனால் வரதன் மாதிரி எவன் கிடைப்பான்? அம்மா தனக்கு வயதாகி விட்டது, இனி முடிய வில்லை என்று விட்டாள். குலாப்பின் துரோகம் அவளை அரித்துத் தின்றது. ஒரு மாட்டுக்குச் சீக்குக் கண்டது. அதைத் தேற்றி விற்றாயிற்று. அதற்கு அடுத்த மாதம் மற்றொன்று. நாங்கள் பால் வாங்கிச் சாப்பிடுகிற நிலைக்கு வந்தாச்சு. எதிர்ச் சாரியில் கோடி வீடே பால்காரன் வீடு. எஞ்சியது ஒரு மாடு. முதன் முதல் மாடு, கறவை இல்லை. விற்க மனமும் இல்லை. வாங்கினவன் கசாப்புக் குத்தான் நேரே ஒட்டுவான். அதற்குப் பாவம், போகப் போக வைக்கோலை மென்று தின்கவும் சக்தியில்லை; சிறுகச் சிறுகக் கடைசியில் கட்டாய முழுப் பட்டினி. நள்ளிரவில் அம்மா எழுந்து கொட்டகைக்குப் போவாள். உதட்டில் இரு விரல்களை வைத்தபடி இவள் அதைப் பார்த்துக்கொண்டு நிற்க, அது எழுந்திருக்கவும் சக்தியற்று அடிக்கடி பெருமூச்செறிந்து, இவளைப் பார்க்க, இருவருக்குமிடையே மோனத்தில் ஏதோ பேச்சு. ஒரு ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல். அம்மா கிணற்றடி யில் இருந்தாள்.