பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 & சிந்தாநதி மாடு திடுதிடுவென எழுந்து தும்பை அறுத்துத் கொண்டு அம்மா முகத்தை முகர்ந்து, கைகளை நக்கி விட்டுப் பொத்தென்று காலடியில் விழுந்து, உடனேயே உயிர் பிரிந்துவிட்டது. அம்மா அழுதுவிட்டாள். அம்மா உள்ளே முறிந்து போனாள். அம்மா பால்காரனை வரவழைத்துப் பித்தளைக் குவளையை அவனிடம் கொடுத்தாள். "வெச்சுக்கோ, ராசி ஏனம். நல்ல மனசோடு பால் ஊற்று.” ஒரு கையால் இரு தவடைகளிலும் போட்டுக் கொண்டு, ஏதேதோ சத்தியம் எல்லாம் பண்ணி விட்டுப் போனான். ஆனால், அன்று எட்டாம் நாளே, சோலையப்ப நாயக்கர் பாலை விளாவி, எங்களுக்குக் கொண்டுவந்ததே அந்தக் குவளையில்தான். ஸ்ர்வம் துரோக மயம் ஜகத். அது ஏன் எந்தப் பால்காரனும், தண்ணிரும் பிரியவே முடியாதபடி அவ்வளவு பொருத்தம் ? பூர்வ ஜன்மாவில் பால்காரன் தவளையா? சுறா மீனா? சிந்தா நதிக் கரையில் மணலோரம் துளும்பும் சில சிற்றலைகள்.