பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தூதுவன் சிமீபத்தில் மும்மடிவாரம் பாலயோகியின் மரணச் செய்தியைப் பத்திரிகையில் படித்து, மிக்க கலவரம் அடைந்தேன். அவருடைய பாலிய வயதிலிருந்தே, சிவராத்திரி சமயத்துக்குத் தினசரிப் பத்திரிகையில் அவரு டைய புகைப்படத்தைக் காணுந்தோறும்- அதற்காகவே காத்திருப்பேன்- அந்த முகத்தின் தனி அழகும், சாந்த மும், அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மட்டிலேனும், மனதில் ஒரு விதமான அமைதி பாய்வதை உணர்வேன். கூடவே ஒரு ஏக்கம், மற்றவர்போல இவரைத் தரிசிக்க நானும் ஒரு நாள் மும்மடிவாரம் போகேனோ? ஆனால் இதுபோல், துளிர்த்த இடத்திலேயே வதங்கிக் காய்ந்து கருகிப்போன ஆசைகள் எத்தனையோ! - ஆனால், சென்ற நாலைந்து வருடங்களாக வந்த போட்டோக்களில், அவர் உடல் தடித்துப் போய், இனிப் பாலயோகி எனும் பெயர் பொருந்தாது என்று தெரிந்ததும் அதையே மனம் பொறுக்க முடியவில்லை. அதுவும் அவர் மரணமடைந்த விதம், வேதனையை அதிகரிக்கச் செய்தது. பட்டினிச் சாவாகத்தான் தெரிகிறது. வருடம் பூரா ஆகாரமே இல்லாது வாழ முடிந்த சக்தி குலையும்படி, அந்தச் சக்திக்கும் அடிப் படைச் சித்தம் குலையும்படி, அந்தச் சித்தத்துக்கும், ஏன், சி ந - 15