பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 & சிந்தாநதி எதற்குமே ஆதாரமாய் நம்பிக்கை தன்னை இழக்கும்படி, இத்தனை நாள் இல்லாதது எது நேர்ந்தது? சமாதி நிலை எது எப்படிக் கலைந்தது? பட்டினிக் கோரத்தை அவர் ஏன் அனுபவிக்க வேண்டும் அந்த அறையுள் என்னதான் நடந்தது? இது யாராலும் துலக்கமுடியாத மர்மமாகவே, கடைசிவரை இருக்கப் போகிறது. இரும்புத் தாழ்ப்பாள் இட்டு, முத்திரை வைத்த அந்தக் கதவுக்கு வெளியே, இவ்வளவு தூரத்தில், குறியற்ற அம்புகளைப் போன்ற கேள்விகளில் புழுங்கிக்கொண்டே யிருக்க வேண்டியதுதான். இல்லை, நான் நினைத்தது அத்தனையும் தவறென, சமாதியிலேயே தேகம் வியோகமாகி, நாளடைவில் இயற்கை வழி rணமாகி விட்டதா? அது மட்டும் மனதுக்கு என்ன சமாதானத்தைத் தருகிறது? இதுவரை சிறுகச் சிறுக மனதில் திரண்டிருக்கும் அவருடைய ஆரா தனையின் உருப்படி, இப்படியே அவருக்கு நேர்ந்திருக்கக் கூடாதே! அட, உன் இஷ்டமா, உன் சட்டமா? இதேபோல, பலப் பல வருடங்களுக்கு முன் நான் சிறான்- நரசிம்ம யோகியைப் பூமிக்கடியில் புதைத்து விட்டு, அவர் குறிப்பிட்ட மணி நேரங்களுக்குப் பின், தோண்டி எடுத்தால் பிணமாகியிருந்தார். ஆனால், பன்முறை இந்தச் சித்தை அவர் செய்திருக்கிறார். பூமிக்குள், எதிர்பாராத விதமாக ஹட யோகத்தினின்று வெடுக்கென விழிப்பு நிகழ்ந்து, சுய நினைவில் உயிர் போன அந்தச் சொற்ப இழைகளுக்கு, மூச்சு எப்படித் தவித்திருக்கும் மனம் என்னென்ன எண்ணியிருக் குமோ? எண்ணிக்கூடப் பார்க்க முடியாத நிலை.