பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 & சிந்தாநதி இந்த நம்பிக்கை எந்த இடத்தில், மேற்கூறிய மூன்று இடங்களில் விட்டது? அது விட்டதா? அவர்கள் அதைத் துறந்தார்களா? அவர்களுக்கு இருந்த அந்தச் சொற்ப நேரத்துள், படிப்படியாகக் கழன்றதா? தடாலென்று நழுவிவிட்டதா? இவர்கள் ஏற்கெனவே அடைந்திருந்த மனப் பக்குவத்தில், நம்பிக்கை இழப்புக்கும், உயிர்மேல் பற்றுக்கும் சம்பந்தம் உண்டா? வேதனைவசியம் பயக்கும், வியக்கும் ஓயாத கேள்விகள். சாவு சமயம், உடலின் மறு செயலை, என் வேளை வரும்போது, ஒருவாறு அனுமானிக்க முயன்று பார்க்கிறேன். என் உண்மையின் தருணம் அல்லவா அது! சென்ற வாரம் ஜுரத்தில் படுக்கையாகி விட்டேன். கூடவே மார்பில் முட்டு சளி, சாதரணமாக எனக்கு ஜூரம் வருவதில்லை (ஆனால் வேறு உபாதைகளை வேனது உண்டு). வந்தால் விடாது. மாதம்கூடச் சாய்த்து விடும். இருமி, வயிறு புண்ணாகிவிட்டது. மூன்று நாட்களாகக் குளிக்கவில்லை. உடலின் அவஸ்தை, உடல் மேல் அவமானம், என்மேல் வெறுப்பு. எல்லா நிலை களுக்குமே அகம், புறம் இருப்பதாக, அனுபவத்தில் தெரிகிறது. சில அக நிலைகளுக்குள்ளேயே, அக அக நிலை. புறப்புற நிலை- வெங்காயத்தைத் தோல் உரிக்கிற சமாசாரம். நோய் மும்முரத்தில் ஒரு வினோத மன நிலை கண்டது. எனக்கும்- சூழ்நிலைக்கும்- இந்த வீடு, என் கிடக்கையில் ஜன்னலுக்கு வெளியே, செம்பருத்திச் செடி, செடியில் சிரிக்கும் பூக்கள், தாண்டி வாழைக் கன்றுகள், காடாக வளர்ந்துவிட்ட முள்வேலி, அப்பால், வெளியே தெரியும் புற்றரை, மேலே வானம், கீழே பூமி, தெருவில் நடமாடும் ஜனங்கள், வீட்டினுள் அவரவர் ஜோலியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தினர்,