பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 8 229 இந்தத் திரைச் சீலையில், என் தனி நினைவற்று, என் கட்டானில் இழைத்திருந்த நான்- திடீரென எனக்கும் இதற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்: சம்பந்தமற்றுமுழுக்க வெட்டிக் கொள்ளாவிட்டாலும், ஒட்டிக் கொண்டிருந்த ஒரு நரம்பு விட்டுப் போய் (ஒட்டுள் புளியம்பழத் தத்துவம் :)-இனிமேல் மீண்டும் அந்த நரம்பு ஒட்டாது, விட்டது விட்டதுதான்- துரதிருஷ்டிக் கண் ணாடியின் மறு நுனியிலிருந்து பார்ப்பதுபோல், எல்லாம் எட்டி எங்கேயோ துார், துரர், பஹாதுார். எண்ணத்தின் நூலில் தொங்குகிறேன். மூச்சு விடாமல் முற்றுப்புள்ளி காணாமல் தோன்றியதனைத்தையும் தோற்றமனைத்தை யும் அப்படியே கொட்டிவிட வேண்டும் நோக்கத்தில் 'ஏக் தம்'மில் சொல்லிவிடப் பார்க்கிறேன். நூல் அறுந்த காற்றாடி, தன் திசையுமிழந்து, காற்றின் அலைவாய். அது கீழிறிங்கும் நேரமும் அலங்கோலமும் எப்படியோ, இல்லை, தரையில் இறங்காமலே, கம்பத் திலோ கிளையிலோ சிக்குண்டு, வேளைக்குக் கொஞ்ச மாக, சிண்டு சிண்டாய்ப் பிய்ந்து, இதயகமலவாசியைக் கடைசிவரை அழைக்காத அகந்தையில், மானக்கோலம் ஆகிவிடுகிறதோ என்னவோ? ஆனால் இந்தச் சொற்பநேரத் துச்சம் கூட, அதன் சுவாரஸ்யமும், சுபாவமும் இல்லாமல் இல்லை. பின்னால் ஒரு மட்டாய் எதிர்பார்த்துக் கொண்டிருப்ப தன் முன் எச்சரிக்கை. முன் ருசி. குறிப்பிட்ட மூன்று உதாரணங்களின் பொதுப்படை அம்சம் ஒன்றை இங்கு குறித்தல் வேண்டும். மூவருமே சாவுக்கு அஞ்சியவர்கள் அல்லர். அவர்களுடைய நம்பிக்கை அபாரமாக இருந்திருப்பினும், பரிபூரணமாக, முழுச் சதமாக இருந்திருக்க முடியாது. அவர்களையுமறி யாமல் அவர்களுடைய துணிச்சலின் எத்தனாவது