பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 231 என் கடவுளே! என் கடவுளே! ஏன் என்னைக் கை விட்டீர்? 1984 வருடங்கள் தாண்டி, சிலுவையிலிருந்து அந்தக் கடைசிக் கூக்குரல், இதை எழுதும்போது கேட்கையில், இப்பவும் குலை நடுங்குகிறது. கோல்கோதாவின் இருள் இதய வானில் கவிகின்றது. தேவகுமாரன் பாடே ஈதெனில் இவர்கள் எங்கே, நாம் எங்கே, நான் எங்கே? ஆனால், இந்தக் கூக்குரலில் ஒரு உபதேசம் இருக் கிறதோ எனக் கூடவே தோன்றுகிறது. என்னதான் யார் எத்தனை உயர்ந்தவராய் இருந்தா லும், கடைசியில் மனித சுபாவம் என்பது இதுதான் என்று உணர்த்துகிற மாதிரி. கர்ணனின் கடைசித் தியாகம், தான் செய்த புண்ணி யம் அனைத்தையும் தானம் பண்ணிவிட்டுப் பார்த் தனின் பாணம் தன் உயிரைச் சூறையாடத் தேர்த்தட்டில் காத்துக் கிடக்கும் வெற்றுக் கர்ணன். - யுத்தமென்றும், விமானம் வெடித்ததென்றும், பூகம்ப மென்றும், காட்டுத் தீ யென்றும், கடல் புரண்ட தென்றும், இயற்கையாகவும் செயற்கையாகவும் நிகழும் மொத்தவாரி உயிர்ச் சேதங்களை இங்கு எடுத்துக்காட் டுக்கு இழுப்பது பொருத்தமன்று. சமாதான காலத்தில், அவகாச நேரத்தில் சிந்திக்க இடம் தரும் தனி மரணத்தைத்தான் இங்கு நினைக்கிறேன். இந்த மூச்சில், வினோபா பாவே தன்னை முடித்துக் கொண்ட விதம், கெளரவம் பற்றி எண்ணாமல் முடிய விடியவில்லை. உடல், சித்தத்துடன் ஒத்துழைக்க மறுக்கிறதென்று கண்டதும், பட்டினி கிடந்து, சடலத்தைக் கழற்றி எறிந்து விட்டார். அவர் செய்கை சட்ட விரோதமில்லையா,