பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 : சிந்தாநதி அல்லது அந்தச் சமயத்துக்குச் சட்டம் கண்ணைச் சிமிட்டி விட்டதா? அதெல்லாம் வேறு விஷயம். இனி உயிர் நீடிப்பது, இயற்கைக்கே அவமானம் என்று சந்தேகமறத் தெளிந்தபின், பிராணத் தியாகத்துக்கு உரிமை வேண்டும் என்றே, வினோபா காட்டிய வழிப்படி தோன்றுகிறது. ஆனால், அந்த தீரத்துக்கு என்ன தவம் கிடக்க வேண்டுமோ!? ★ ★ ★ என் இளவரசியிடமிருந்து சேதி தாங்கித் துதுவன் வந்துவிட்டான். என்னைப் பொறுத்தது அந்தண்டை காத்திருக்கும் என் மறு பாதி. பிறவியும் மரணமும் தன் இரு பக்கங்களாய நாணயம் தானே வாழ்க்கை. நான் இங்கு ஆண் ஆனால், அது அங்கே என் தலைவி. நான் பெண்ணானால் அதோ அங்கு என் இளவரசன். எப்படியும் என் பிராண நாயகர். என் இளவரசியிடம் சேதி தாங்கி, என்னை அவனி டம் அழைத்துச் செல்லத் தூதுவன் வந்துவிட்டான். இதற்கென்றே பிறவியெடுத்து, என் வாழ்நாள் பூராக் காத்திருந்த சேதி. என் மணக் கட்டிலை அலங்கரியுங்கள். என் மரணத்தின்போது என் பக்கலில் யாரும் வேண்டாம்.