பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 & சிந்தாநதி விடிகாலை ஆலய மணி ஓசை, இதுவே ஒரு கோஷ்டி கானம். இந்த வேளைக்கு, என் நினைப்புக்கு நேர் மாறாக, வாய்க்காலில் ஜூலம் காலில் இதவாகக் கதகதக்கிறது. நான் வீடு நெருங்குகிற சமயத்தில்தான் வானத்தில் சிவப்பு திட்டிடுகிறது. பொழுது விடிகிறது என்று சொல் வதைவிட வெடிக்கிறது என்பது சரியாகியிருக்குமோ? பின் ஏன் பாளம் பாளமாக அத்தனை விரிசல்? பெரிய சத்தம் போடாத விரிசல்கள். அண்ணா பல் விளக்கிக் கொண்டிருக்கிறார். அண்ணாவுக்குப் பல் விளக்கத் தினமும் வென்னிர்தான். அண்ணாவுக்குச் சமையல்கூடத் தனிதான். அதுக்காக அண்ணாமேல் அசூயை இல்லை. நோயில் அண்ணா படும் அவஸ்தையும் தனி ஆச்சே! இருமி இருமித் துப்பி, ஒருவாறு மார்பிலிருந்து கோழை கழன்ற பிறகுதான், மூச்சே ஒருவாறு வழிப்படும். அண்ணா மேல் பொறாமையில்லை. ஆனால், இரவு அண்ணாவுக்குக் குடிக்க, அம்மா ஆவி பறக்கத் தம்ளரில் பாலை எடுத்துக்கொண்டு வருகையில் எனக்கும் ஒரு முழுங்கேனும் கிடைக்காதா? அம்மா இத்தனைக்கும், மூணிலே, நாலிலே ஒரு தரம் கொடுப்பாள். மாதம் ஒரு நாள் எல்லாருக்குமே பாலும் சாதம் ஸாங்க்ஷன். ஆனால், சபலம் மட்டும் விடுவதில்லை. அண்ணா குளிச்சுட்டு, ட்ரெஸ் பண்ணிண்டு, பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டாச்சு. கழுத்துவரை பொத்தான் கோட்டு, டர்பன். நெற்றியில் குழைத்து இட்ட விபூதி, கழுத்தைச் சுற்றி உத்தரீயம், பஞ்சகச்சம், வேட்டிக் கொடுக்கை ஒரு கையில் பிடித்த வண்ணம் வேக் வேக்" என நடந்து போகிறார். அண்ணாவின் வேட்டிக் கரையில் கூட அழுக்கு காணாது.