பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 237 அதேபோல், அண்ணாவின் மோருஞ் சாதமும் வெள்ளை வெள்ளேர் என்றிருக்கும். தொட்டுக்கச் சொட்டிக் கொள்ளும் குழம்புகூடப் பொட்டிட்ட மாதிரித் துலங்குமே ஒழிய, மோரின் வெண்மை, தூய்மை குறையாது. இத்தனை சுத்தம் அண்ணாவுக்கு மட்டும் எப்படி ? என் பொறாமை யெல்லாம் இப்படித் தானிருக்கும். வயது ஆறுதான். ஆனால், அந்த வயதுக்கு வேண்டிய நல்லத்தனம் என்னிடம் இல்லை என்றே இப்போ தெரிகிறது. நான் பள்ளிக்கூடம் போகவில்லை. வீட்டில் இருக்கிறேன் என்று பெயரே ஒழிய, அண்ணா எனக்கு வேண்டிய பாடங்கள், கணக்குகள் செய்யக் கொடுத் திருக்கிறார். எனக்கு ஒழிவு என்பதே கிடையாது. எல்லாரும் மாலையில் விளையாடும் நேரத்தில், அண்ணா பள்ளிக் கூடத்தில் இருந்து திரும்பினதும், என்னைப் பிடித்துக் கொள்வார். என்னைக் கவனிக்க அவருக்குக் கிடைக்கும் நேரம் அப்போத்தான். அது பாட்டுக்குப் போய்க் கொண்டேயிருக்கும். ஏழு, எட்டு, ராச் சாப்பாடு தாண்டிக்கூட அடி, திட்டு, கெஞ்சல், கொஞ்சல், மிஞ்சல் இந்தச் சம்பிரமத்தோடு, பாடங்களா அவை? என் வயதுக்கு மீறின அறிவை, தகவல்களை என் மண்டைக்குள் கெட்டிப்பு... அண்ணாவுக்கே அது தெரியும். "நாம் குறுக்கு வடம் போட்டவா. போனா முள்ளைத் தள்ளறவா. நமக்கு விமோசனம் கிடையாது. நம் வயிற்றுப் பிழைப்புக்கு இத்தனை தயாரிப்பு வேண்டியிருக்கு." என்ன புரியறது. ஏதோ எச்சரிக்கை என்று தவிர: பாடம் நடக்கையில் அம்மா எனக்கு வாரிசு வர மாட்டான். ஆனால் அவள் சொன்ன யோசனைப்படி