பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 & சிந்தாநதி எங்கள் வீட்டில் பரம்பரையாக ஒரு கோட்டு உண்டுஅதைப் போட்டுக் கொண்டு பாடத்துக்கு உட்காருவேன். அடித்தாலும் வலி அவ்வளவாக உறைக்காது அல்லவா? ஆனால், அனுபவத்தில் நான் கண்டது, அதெல்லாம் வெறும் நினைப்புத்தான். அண்ணாவுக்கு இந்தச் சூழ்ச்சி தெரியாதா? ஆனால் என்னை அவர் கோட்டைக் கழற்றச் சொன்னதில்லை. கன்னத்திலும் அடித்ததில்லை. அது அவருடைய கொள்கை போலும். அண்ணா மதியம் திரும்புவதற்குள், குழந்தைகளின் சாப்பாட்டுக் கடை ஆகிவிடும். சமையல் ஏதோ ஒரு ஐட்டம்தான். குழம்பு இருந்தால் ரஸம் இருக்காது. குழம்பு, பொரியல் அல்லது ரஸம், பொரியல் அல்லது துவையல், பானையில் குளிர வைத்த மோர். ஒன்றே சாப்பிட்டாலும் நன்றாகச் சாப்பிடு வோம். நன்றாக இருக்கும். இப்போ நாலு குழந்தை களுக்கு அவர்கள் அம்மை. அவரவருக்குப் பிடித்ததாக நாலு தனித் தனிச் சமையல் செய்கிறாள். அரைத்து விட் டேண்டா கரைத்து விட்டேண்டா என்று கெஞ்சுகிறாள். சம்பாதிக்கிற பையன்கள் வகையாக ஒட்டலில் பிடித்துவிட்டு, இங்கே கலத்தில் உட்கார்ந்து எழுந்திருக் கிறான்கள். கலத்தின் கணிசமான மிச்சத்துக்கு ரோஸி, ஏற்கெனவே அதிலேயே கொழுத்து, முற்றத்தில் காத் திருக்கிறது. "நாக்கை வளர்த்தால், நீ பாடம் படிச்சு உருப்பட்ட மாதிரிதான்.” இது என் தாயார் வழி. இத்தனைக்கும் தவம் கிடந்து பெற்ற பிள்ளை நான். செல்லம் கொடுப் பது, பிரியமாயிருப்பது என்பதற்கு அந்நாளில் வேறு அர்த்தங்கள், பார்வைகள். அம்மா சொல்வாள்: "பிடித்தால் தின்னு, பிடிக்கா விட்டால் முழுங்கு. வாழ்வதற்கே உபதேச மந்திரமாக