பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வான்கோழி நடனம் மெரீனா கடற்கரையில் மணிக்கொடி கோஷ்டி கலைந்துபோன பின்னர் கொஞ்ச காலம் எனக்கு ஏக்க மாயிருந்தது. அப்போதுதான் உருவாகிக் கொண்டிருந்த ஒரு பருவ இளைஞனுக்கு-இன்னும் பையல் பருவம் முழுக்கக் கடந்தபாடில்லை. அந்தச் சுகவாசமே ஒரு பாசனம். என்னுடை குண, சித்த அமைப்புக் கட்டத்தில் ஒரு அதிர்ஷ்ட வேளை ஆசை காட்டிவிட்டு அவிந்து விட்டது. இப்போதெல்லாம் என் அப்போதைய வயதினர் அந்நேரங்களைக் கழிக்க, வழிகள் எவ்வளவோ ஏற்பட்டிருக்கின்றன. அப்படியும் நான் கண்ட ருசியை அவர்கள் காணவில்லை என்றுதான் சொல்வேன். இன்றைய இளவல்களுக்கு எதிலுமே ஒரு வியப்போ, புனிதமோ, தரிசன உணர்வோ, உணர்ச்சியோ இருப்ப தாகத் தெரியவில்லை. இவர்கள் எப்போதேனும் வாழ்க் கையில் ஆனந்தம் எனும் நிலையை அனுபவிப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. என் தந்தை எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த முறையில் என் பாலியத்தில், கிராமத்தில், ஒரளவேனும் இயற்கையுடன் இழைந்த வாழ்க்கையில், எனக்குக் கண்டிருந்த இலக்கியப் பற்று பிசுபிசுத்துப் போகவில்லை. கேட்கப் புகின், பட்டணத்தில் என் தனிமையின் வேட்கையில், அது கொழுந்து கண்டது. கன்னிமரா