பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 243 லைப்ரரி, யூனிவர்ஸிடி லைப்ரரி எனத் தேடிப் போய்ப் படித்தேன். இது உத்தியோக வேட்டை நடுவே. கூடவே என் எழுத்து, சக்தி, சந்திரோதயம், பின்னர் தொடர்ந்து அமுதசுரபி, வெகு நாட்களுக்குப் பின்னர் கலைமகள் பத்திரிகைகளில் வெளிவரத் தலைப்பட்டது. இதற்குள் வேலையும் நல்ல இடத்தில் நிலைத்ததும், என் வண்டியின் இரண்டு சக்கரங்களும் எண்ணெயும், மையுமிட்ட மாதிரி ஓடின. எழுத்துலகிலும் ஊன்றிக் கொள்ளும் அதிர்ஷ்டம் வந்தது. லா.ச.ரா. பாணி; புரியாத எழுத்தாளன்- அதுவே ஒரு விளம்பரம் தான். அதன் விளைவால் தன்னம்பிக்கையும் அதிகாரமும் ஊற ஆரம்பித்தன. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் நிலை இனி இல்லை. என் கலை எனக்கு. உத்யோகம் குடும்பத்துக்கு, என் கடமையைச் செலுத்த இரண்டும் தனிக் குதிரைகள், ஜாதிக் குதிரைகள். சேர்ந்து பக்கத்தில் பக்கத்தில் ஓடின. கலைஞனுக்குப் பசி தெரிந்திருக்க வேண்டும். பசித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஆனால், அவனுக்கு வயிற்றுக் கவலை கூடாது. எளிமை ஆனால் ஏழ்மை அல்ல. நேர்த்தி, ஆனால் தெவிட்டல் அன்று. கலையின் முறையான வளர்ச்சிக்கு இவை என் நிபந்தனைகள். fitfirfig Listfrcoals- a sense of romance, oatmá), (5Tair குறிப்பிடுவது T V யில் ஒளியும்-ஒலியும் romance அல்ல. நான் குறிப்பிடும் sense ofromance இலாது கலைமேல் வேட்கையோ, எந்தவிதமான தேடலோ, ஆத்மீகத் தேடல் உள்பட, இல்லை. நான் குறிப்பிடும் sense ofromance is a cosmic emotion. 33spé5 Graśrasfil to 315p @@606v. அன்று. என்றோ என்று ஆகிவிட்ட அன்று, பண்பு மிக்க அந்த ஒரு சிலர், லகவியவாதிகள், எழுத்துக்கே அர்ப்பணமானவர்கள், இலக்கியத்தைப் பற்றி, நின்று சில