பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 245 இது சாக்கில் ஒன்று சொல்லிவிடுகிறேன். தொழில் முறையில், தச்சனுக்கு உளியை உபயோகிக்கத் தெரிந் திருக்க வேண்டும். குயவனுக்குச் சக்கரத்தைச் சுற்றத் தெரிந்திருக்க வேண்டும். கொல்லனுக்கு அவன் கரண்டியைப் பற்ற சிற்பிக்கு- முடிவேயில்லை. இவர்கள் எல்லாம், பெரிய ஆளிடம் சிற்றாளாகப் படிப்படியாகத் தங்களைத் தயாரித்துக் கொள்கிறார்கள். அதே முறையில் எழுத்தாளனுக்கும், தொழில் முறையில் பார்த்தாலும், ஒரு அதம பr முன் தயாரிப்பு வேண்டும். பேனாதானே அவன் ஆயுதம்! இதர இலக்கியங்களோடு தீர்மானமான பரிச்சயம், கற்பனையைச் சீரான பாதையில் செலுத்தும் விதம், சொற்களின் நயங்கள், ஒசைகளின் இடம், punctuation இன் பாஷை... ஒ முடிவே கிடையாது. ஒரொரு சமயம் இடங்களிடம் நான் கண்ட வரட்சி யில், கண்ணாடி மாறிவிட்டார்போல், அன்னியர் களாகவே பட்டார்கள். இவர்களில் ஒரிருவர் ஆனந்த விகடன், கல்கியில் பிரசுரமாகியிருந்தனர். எனக்கு அப்போது இன்னும் அங்கு இடம் கிடைத்த பாடில்லை. அந்த வெற்றியின் சேவற் கொண்டைச் சிலிர்ப்பு அவர்களிடம் இருந்தது. இருக்கவும் வேண்டியதுதான். ஆனால், என் லகவியங்கள்படி இவர்கள் எழுத்தாளர்கள் இல்லை. இவர்களிடம் அதற்கு வேண்டிய வாசிப்பு, தயாரிப்பு ஆர்வம் இல்லை. இவர்களும் எழுதினார்கள். அவ்வளவு தான். Gaufrääft to 5m of Turgenev, Yama the pit, Johan Bojar, Knut Hamsun, Sir Thomas Mann arsimi appláistarrrab uuirff பைத்தியக்காரன்? சீக்கிரம் எனக்கே திரிபு அறத் தெரிந்து விட்டது. எல்லாம் ஒரு ஆள் கூத்தாக, நானே கேள்வி கேட்டு, நானே பதில் சொல்லிக்கொண்டு, நானே என்னை