பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 247 பண்டைய கால குருகுல வாஸ்ம்- சங்கீதம், வேத பாடங்களுக்கு மட்டும்தானா? எழுத்தின் சாதகத்துக்கு இருந்திருக்கக்கூடாதா? இருந்ததா? இல்லையா? நாதோ பாஸ்னையில் துணைக்கு ஒரு dimension ஏனும் உண்டு. செவி நுகர்ச்சிமூலம், பின்பற்றி, ஸ்வர ப்ரஸ்தாரத்திலும், ஆலாபனையுமாக விரிய, ஆனால் எழுத்தில் அந்தத் துணை கூட இல்லை. சிலந்தி தன் வயிற்றிலிருந்து நூற்ற நூலில்தான் ஆபத்கரமாகத் தொங்குவதுபோல, எண்ணத் தின் இழை. ஆகவே, குருவின் துணை இங்கு அத்தி யாவசியம் இல்லையா? w என் பெருமூச்சு என்னின்று வெளிப்பட்ட பின் தெரிகிறது. இல்லை, எழுத்தில் இது சாத்தியமில்லை. தந்தை வழி மகன் பரம்பரை இதற்குக் கிடையாது. இது தவம். தனித் தனித் தவத்தின் தனித் தனித் தரிசனங்கள். உள் கண்ணில், வால்மீகி மறு நிகழ்ச்சியாகக் கண்டு, ராமாயணத்தை இயற்றினாற் போல. ஆகவே, இவர்கள் வந்தார்கள், கலைந்தார்கள், அவரவர் விதிப்படி பிரிந்தும் போய்விட்டார்கள். என் எழுத்தின் தனிமையின் உருவமாகக் குளத்தங் கரையில், கோபுர விளக்கும் நானும்தான். சிந்தா நதியில் துரண்டிலில் மீன் பிடிக்க வீண் முயற்சி. ് భ్కీ భ 4). 创 శ్య