பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 251 சொல்லப் பயமாயிருக்கும். பிறகு கவனம் வெடுக்கெனக் கலைந்தாற்போல் தலையை உதறிக்கொண்டு சுற்று முற்றும் பார்ப்பார். அன்னியனைப் பார்ப்பதுபோல், கண்ணில் லேசான கடுப்புக்கூட. "உருவேறத் திருவேறும்” என்பார், முன்பின் தாக்கல் நோக்கல் இல்லாமல். h "அப்படீன்னா?” நான் என்ன சின்னப் பையன் தானே ! “புரியவில்லையா?” புன்னகை புரிவார் (அரிசிப்பல்). "புரிந்து கொள்ளும்போது புரிந்துகொள். புரியும் வேளை வரும்போது தானே புரியும். அப்போதும் எல்லாமே புரிந்த மட்டில்தான்.” இந்தச் சிலம்ப விளையாட்டு எனக்கென்ன புரிகிறது?) இப்போது அனுபவத்தில் அறிகிறேன். பாஷைக்குள் ஒரு பாஷை ஒளிந்து கொண்டிருக்கிறது. பரிபாஷைதான் உண்மை பாஷை, ஒரு புருவ உயர்த்தல். ஒரு விரல் சொடுக்கு, ஒரு புன்னகை, அதரத்தின் வில் வளைவு; மோனமாகக் கன்னத்தில் புரளும் இரு கண்ணிர் துளிகள், நாணத்தில் தலைகுனிவு, இவை பேசும் ஒரு அகிலம், மூச்சு விடாமல் மணிக்கணக்கில் கொட்டும் வார்த்தைகளால் இயலா. எல்லாம் பட்டவர்த்தனத்தில் வாழ்க்கையில் ஒரு வியப்பு. ஆச்சரியத்தை இழந்ததோடு இறைமறைவு, காய் மறைவின் Mysticism... இதையும் இழந்து கொண்டிருக் கிறோம். நாணம், வெட்கம், கூச்சம் எனும் பேரழகுகள் போயே விட்டன. எதற்குமே நேர்ப் பதில் கிடையாது. இதுதான் உண்மை. எல்லாமே கேள்வியைச் சுற்றிய பதில்கள் தாம். கேள்வி ஒன்று ஆனால், பதில்கள் பல கேள்விக்கு ஒரு