பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 255 இத்தனைக்கும் காரணம் மனிதனின் தியாக உணர்ச் சியா? இல்லை. சமுதாயத்தின்மீது பீறிடும் அன்பா? என்றால், முழுக்கவும் ஒப்புக்கொள்வதற்கில்லை. சவால் என்கிறேன். பிறவியின் ஊடே வந்து அவனவன் விதி வட்டத்துள், மனிதன் தன் அமரத்தை நிரூபிக்க முயலும் தன்மை சிலரிடம் அதன் பலாபலன்களுடன் வெளிப்படை யாகிறது. பிறரிடம் உறங்கிக் கிடக்கிறது, உரிய உந்தல் நேரும் வரை. ஆனால், யாரிடமும் இல்லாமல் இல்லை. இருக்க முடியாது. சவாலின் மறு பெயர் ரோசம். தனக்கு இல்லை என்று எவனும் ஒப்புக்கொள்ள மாட்டான்; அதுவே தனி ரோசம் (ரோஷம் ?). எழுத்து ஒரு பெரிய சவால், ருசி கண்டவன் அறிவான். ஒரு பெரிய உந்தல் வெறி. சொந்த நாணயத்துக்கு, அந்தந்த நாகரிகத்துக்கு எழுத்து ஒரு உரைகல். எங்கோ ஆரம்பித்து, சிந்தா நதியின் கதி தள்ளி, எங்கோ வந்துவிட்டேன் ஆ1- மோனம். மோனத்தில் நான் நாடியது இது வரை எனக்குக் கிட்டவில்லை என்று ஏற்கெனவே கூறி விட்டேன். அமைதி கூடக் கிடைக்கவில்லை. என்னதான் நாடுகிறேன்- திண்ணமாக அறியேன். வாயைப் பூட்டிவிட்டால் மட்டும் மோனம் ஆகி விடுமா? உள் புழுங்கும் ஆத்திரங்கள், பல் நெரிப்பு, எண் ணங்களின் சத்தமற்ற ஓயாத இரைச்சல்- இவைகளிட மிருந்து எங்கே ஒடுவேன்? "இந்த வயசில், இந்த வம்பு எல்லாம் உனக்கேன்? பேசிவிடு. வாயைத் திற. ஆத்திரங்களை வெளியே கொட்டு.” நமு நமு